
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1972 - இரண்டாம் உலகப்போரில் காணாமல் போன ஜப்பானிய படைவீரனான சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான். * 1978 - கொஸ்மொஸ் 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன. * 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது. * 1986 - வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது. * 1993 - துருக்கிய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஊகுர் மும்க்கு அங்காராவில் கார்க் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
* 1996 - மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார். * 2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் கடத்தப்பட்டது. * 2009 - இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார்.