
இந்த மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சியும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன.
ஒரு வறட்சியான மாவட்டமாகவே புதுக்கோட்டை உள்ளது. மாவட்டத்தின் நீர் வரத்து பெரும்பாலும் பருவ மழையை நம்பியே உள்ளது.
இம்மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உள்ளன. குளத்தூர், இலுப்பூர், ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருமயம், பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டங்களும் உள்ளன. இவற்றுள் 756 பெரிய வருவாய் கிராமங்களும் அடங்கும்