
மேலும் சில நிகழ்வுகள்:-
1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
1761 - இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1932 - தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது