
இதே தேதியில் நிகழ்ந்த மக்கிய நிகழ்வுகள்:-
* 1800- மியூனிக் அருகில் ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர். * 1818 - இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21-வது மாநிலமானது. * 1854 - ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிசூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். * 1903 - சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
* 1904 - வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. * 1912 - பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் செர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. * 1917- 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.
* 1944- கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது. * 1967- தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.