
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். 1918 - ஐஸ்லாந்து, டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது. 1918 - செர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது. 1924 - எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது. 1934 - சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது. 1958 - சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1960 - காங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா ராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார். 1961 - இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது. 1963 - நாகாலாந்து இந்தியாவின் 16-வது மாநிலமானது. 1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது. 1971 - இந்திய ராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது. 1973 - பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது. 1981 - யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.
1981 - எயிட்ஸ் நோய்க்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது. 1982 - முதலாவது செயற்கை இதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டது. 1989 - பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது. 1989 - பிலிப்பைன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. 1991 - பனிப்போர்: உக்ரைன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.