
அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது. அவற்றில் சில In Which Annie Gives It Those Ones and Electric Moon. அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர்.
இதற்கு அவர் படித்த பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை காரணமாகத் திகழ்ந்தது. இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமேரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த குரல் பலமுறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. தன் எழுத்து மக்களைச் சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள், அரசியல் கட்டுரைகள் , விமர்சனங்களைப் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார்.
இவரது படைப்புகளின் தன்மை பல நேரம் எதனையும் கருப்பு வெள்ளையென்று பிரித்து அடையாளம் காட்டாது. மனிதர்கள், நாடுகள், கொள்கைகள் என்று அனைத்திலும் உள்ள தீமை மற்றும் நன்மையை உணர்ச்சி நிலையிலிருந்து விலகி படைப்பதால் இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுவருகின்றன.
1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்.
மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.