
மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் 2007-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி உருவாக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை என மூன்று வருவாய் வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், த பழூர் ஊராட்சி ஒன்றியம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், செந்துறை ஊராட்சி ஒன்றியம் என ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் என மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.
இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:-
* 1936 - முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.
* 1940 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
* 1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.
* 1978 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
* 1980 - தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் கொல்லப்பட்டனர்.
* 1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்டாவில் தரையிறக்கப்பட்டபோது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
* 1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
* 1996 - எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
* 1998 - கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
* 2005 - லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தேர்வு செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
* 2007 - ஆர்ஜென்டினாவுக்குத் தெற்கே பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டனர்