
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1905 - நார்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர். * 1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்- டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார். * 1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார். * 1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார். * 1938 - மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜெர்மனியின் திட்டத்தை ஹேர்மன் கோரிங் என்பவர் வெளிக்கொணர்ந்தார்.
* 1941 - இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் செர்வோனா உக்ரயீனா மூழ்கடிக்கப்பட்டது. * 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜெர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நார்வேயில் மூழ்கடித்தது. * 1948 - டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய ராணுவ அதிகாரிகளுக்கு 2-ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது. * 1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.