
20-ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300- 500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய் தாக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர்.
எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796-ம் அண்டு கண்டுபிடித்தார். 1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.
அதனால் 1979-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி இந்நோய் உலகத்தில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.