
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1865 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைமுறை தடை செய்யப்பட்டது. * 1877 - வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது. * 1884 - வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது. * 1897 - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது. * 1907- மேற்கு வெர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
* 1917 - பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. * 1957: வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்துச் சிதறியது. * 1917 - கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது. * 1921 - இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. * 1922 - ஐரிய சுதந்திர நாடு உருவானது. * 1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் பின்லாந்து மீது போரை அறிவித்தது. * 1957 - வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
* 1971 - இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது. * 1977 - தென் ஆப்பிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை. * 1992 - அயோத்தியாவில் 16-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது. * 1997 - சைபீரியாவில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
* 2005 - சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். * 2006 - செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.