
1991-ம் அண்டு ஜனவரி 17-ந் தேதியில் வான்வழி தாக்குதலும், பிப்ரவரி 23-ந் தேதி தரை வழித் தாக்குதலும் தொடங்கியது. குவைத்திலிருந்து ஈராக்கிய படைகளை விரட்டி அடித்த கூட்டுப் படையினர் ஈராக் நிலப்பகுதிக்குள் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய 100 மணி நேரத்துக்குள் கூட்டுப் படையினர் பெற்றி பெற்று போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் புயல் படை நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த போரில் 20,000 முதல் 35,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 75,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.