என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ரியல்மி 3i இந்திய வெளியீட்டு தேதி
Byமாலை மலர்9 July 2019 4:13 AM GMT (Updated: 9 July 2019 4:13 AM GMT)
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 3i ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனினை ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இதற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்நிலையில், ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் ரியல்மி 3i ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார்.
பெரிய டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி மற்றும் அழகிய வடிவமைப்புடன் இது 'ஸ்மார்ட்போன்களின் சேம்பியன்' என ரியல்மி அழைக்கிறது. ரியல்மி 3i ஸ்மார்ட்போன் ரியல்மி 3 மாடலின் விலை குறைந்த வெர்ஷனாக இருக்கும். அந்த வகையில் புதிய ரியல்மி 3i ஸ்மார்ட்போனின் விலை ரியல்மி சி2 மற்றும் ரியல்மி 3 மாடல்களுக்கிடையே நிர்ணயிக்கப்படும்.
See you coming Monday, with our next #DareToLeap product,
— Madhav X (@MadhavSheth1) July 8, 2019
By the way, any guesses on how many products we are launching?#mondaymotivation#leaptopremiumpic.twitter.com/NERRtOpQFZ
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி70 12 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 3டி கிரேடியண்ட் யுனிபாடி வடிவமைப்பு, டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×