search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பி.எஸ்.என்.எல். லோகோ
    X
    பி.எஸ்.என்.எல். லோகோ

    அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு பிரத்யேக சிம் வழங்கும் பி.எஸ்.என்.எல்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவில் அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேக சலுகைகள் அடங்கிய சிம் கார்டுகளை வழங்குகிறது.



    அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேக சிம் கார்டு வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.

    ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் மற்ற மாநில சிம் கார்டுகள் வேலை செய்யாது என்பதால், பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற்றிருக்கிறது.

    பி.எஸ்.என்.எல். அமர்நாத் யாத்திரை சிம் கார்டு கட்டணம் ரூ. 230 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 333 நிமிடங்களுக்கு இலவச டாக்டைம், 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பத்து நாட்கள் ஆகும். அதிகளவு பயனர்கள் வருவார்கள் என்பதால் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

    அமர்நாத் யாத்திரை

    சுற்றுலா பயணிகள் கூடும் வரவரேற்பு மையம் மற்றும் இதர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேம்ப்களில் பயனர்கள் தங்களின் அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழ் ஆதாரங்களை வழங்கி புதிய சிம் கார்டினை பெற்றுக் கொள்ளலாம். அமர்நாத் யாத்திரை ஜூலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  

    ரிலையன்ஸ் ஜியோவும் அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேக சலுகையை ரூ. 102 விலையில் வழங்குகிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். மற்றும் அதிவேக 4ஜி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும் தினசரி பயன்பாட்டு அளவு 0.5 ஜி.பி.யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்பின் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

    ரிலையன்ஸ் ஜியோ அமர்நாத் யாத்திரை சலுகை ஏழு நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இது ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்கிறது. மேலும் இச்சலுகையில் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படவில்லை.
    Next Story
    ×