என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
12 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த எல்.ஜி. ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்4 July 2019 4:15 AM GMT (Updated: 4 July 2019 4:15 AM GMT)
எல்.ஜி. நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் 12 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.
எல்.ஜி. நிறுவனத்தின் புதிய டபுள்யூ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முதல் விற்பனை இந்தியாவில் நேற்று துவங்கியது. முதற்கட்டமாக எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இரு ஸ்மார்ட்போன்களும் முதல் விற்பனை துவங்கிய 12 நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்ததாக எல்.ஜி. அறிவித்துள்ளது. 12 நிமிடங்களில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின என்பதை எல்.ஜி. அறிவிக்கவில்லை. எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ30 ஸ்மார்ட்போன்களின் இரண்டவாது விற்பனை ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
WoW! We're are completely SOLD OUT. #LGWSeries will be back with LG W10 and LG W30 Smartphones in next sale on 10th July, at @amazonIN. Stay tuned! #ThreeIsInpic.twitter.com/l2eX3luvt2
— LG India (@LGIndia) July 3, 2019
சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்களில் முறையே 6.19 இன்ச் மற்றும் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் விஷன் நாட்ச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×