search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்
    X

    ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்

    மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா ஒன் விஷன் இன்று ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா ஒன் விஷன் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாகும் போதே இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என மோட்டோரோலா அறிவித்தது.

    இந்நிலையில், மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று (ஜூன் 27) மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் என்பதால், இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு கொண்டிருக்கிறது. இதனால் கூகுளின் அப்டேட்களுக்கு முன்னுரிமை பெறும். 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 சினிமா விஷன் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எக்சைனோஸ் 9609 பிராசஸர், 25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா, 1.8µm குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த தொழில்நுட்பம் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும். ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டிருக்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனிற்கு இரண்டு அப்டேட்கள் நிச்சயம் வழங்கப்படும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.



    புகைப்படங்களை எடுக்க பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா, நைட் விஷன் மோட், OIS மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை மெமரி மாடலில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் பிரான்ஸ் கிரேடியன்ட் மற்றும் சஃபையர் கிரேடியன்ட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    அறிமுக சலுகைகள்:

    ப்ளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை கிடைக்கும். வோடபோன ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3750 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 250 ஜி.பி. வரை 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.
    Next Story
    ×