search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜியோ ஜிகாஃபைபர் விலை விவரங்கள் வெளியானது
    X

    ஜியோ ஜிகாஃபைபர் விலை விவரங்கள் வெளியானது

    ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் புதிய கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஜியோவின் ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. பீட்டா முறையில் சோதனை செய்யப்படும் இந்த சேவை ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் மூலம் அதிவேக இணைய சேவையை சீராக வழங்கும் என கூறப்படுகிறது.

    புதிய பிராட்பேண்ட் சேவையை ஜியோ அறிமுகம் செய்வதால் இதன் கட்டணம் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஜியோ ஜிகாஃபைபர் விலை பற்றி ரிலையன்ஸ் ஜியோ எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், ஏற்கனவே சேவையை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையை ஜியோ நிர்ணயிக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவை கட்டணங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய விவரங்களில் பேஸ் பிளான் பயனர்களுக்கு ரூ. 600 மாத கட்டணத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த கட்டணத்தில் பயனர்களுக்கு 50Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் 100Mbps வேகம் கொண்ட திட்டம் மாதம் ரூ. 1000 கட்டணத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் விலையை ஜியோ இதுவரை உறுதிசெய்யவில்லை. எனினும், இந்த சேவை வெளியீடு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக ஜியோ மேலே கொடுக்கப்பட்டிருப்பதை போன்று இரண்டு சலுகைகளை அறிவிக்கலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஜியோ ஜிகாஃபைபர் சேவையில் பயனர்களுக்கு 100 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. பிராட்பேண்ட் டேட்டா தவிர ஜியோ ஹோம் டி.வி. சேவை மற்றும் லேண்ட்லைன் இணைப்பு உள்ளிட்டவையும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஹோம் டி.வி. சேவை மூலம் ஜியோ டி.டி.ஹெச். துறையில் கால்பதிக்கலாம் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×