search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி K20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    ரெட்மி K20 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமி நிறுவனம் தனது ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் வெளியீடு இந்தியாவில் இன்னும் நான்கு வாரங்களில் நடைபெறும் என சியோமி நிறுவனத்தின் மனு குமார் ஜெயின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

    ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய அறிவிப்பில் சரியான தேதியை குறிப்பிடாமல் நான்கு வாரங்களில் அறிமுகமாகும் என்று மட்டும் அவர் தெரிவித்தார். ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி மனு குமார் ஜெயின் தகவல் வழங்கி இருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகலாம்.



    ரெட்மியின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சீன சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சீன அறிமுகத்தின் போதே இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சியோமி நிறுவனம் சமீபத்தில் K20 சீரிஸ் மாடல் உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் என கூறும் டீசர் ஒன்றை வெளியிட்டது.

    ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரும், ரெட்மி K20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    சீனாவில் ரெட்மி K20 ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 1,999 (இந்திய மதிப்பில் ரூ.20,000) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 2,099 (இந்திய மதிப்பில் ரூ.21,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இதேபோன்று ரெட்மி K20 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 2,499 (இந்திய மதிப்பில் ரூ.25,000) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 2,999 (இந்திய மதிப்பில் ரூ.30,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை இதைபோன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×