search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மீண்டும் முதலிடம் - மாஸ் காட்டும் டிக்டாக் செயலி
    X

    மீண்டும் முதலிடம் - மாஸ் காட்டும் டிக்டாக் செயலி

    இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok



    இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

    பின் சென்னை உயர்நீதிமன்றம் செயலிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு செயலிக்கு விதித்த தடையை நீக்கியது. இதன் தொடர்ச்சியாக பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்த டிக்டாக் தற்சயம் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்சமயம் ஐ.ஓ.எஸ். மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகளுக்கான சோஷியல் பிரிவில் டிக்டாக் செயலி முதலிடத்தில் இருக்கிறது.

    பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் #ReturnOfTikTok என்ற தலைப்பில் புதிய திட்டத்தை துவங்கி அதன் மூலம் செயலியை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. #ReturnOfTikTok திட்டத்திற்கு டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    இதையொட்டி பயனர்கள் சிறு வீடியோக்களை உருவாக்கி #shareandwin ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை டிக்டாக்கின் #ReturnOfTikTok திட்டத்தை சுமார் 504 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தினந்தோரும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.3,49,63,000 வரை நட்டத்தை சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடை காரணமாக சுமார் 250 பேருக்கு வேலை பறிபோகும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×