என் மலர்

  தொழில்நுட்பம்

  12 ஜி.பி. ரேமுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்
  X

  12 ஜி.பி. ரேமுடன் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூ 12 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. #iQOO #smartphone  விவோவின் துணை பிராண்டான ஐகூ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கு பல்வேறு டீசர்களை ஐகூ வெளியிட்டு வந்த நிலையில், தற்சமயம் இதன் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  ஐகூவின் பெயரிடப்படாத முதல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 44 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதியும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி, சூப்பர் ஹெச்.டி.ஆர்., என்.எஃப்.சி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.  இத்துடன் புதிய ஐகூ ஸ்மார்ட்போனில் 4டி ஷாக் அம்சம் வழங்கப்படுகிறது. முந்தைய டீசர்களை போன்று புதிய டீசரிலும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் இது ஆறாம் தலைமுறையை சார்ந்தது என கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார்களை விட அதிவேகமாக இயங்கும் என எதிர்பார்க்கலாம்.

  புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் 4டி கேமிங் வசதியும், சூப்பர் HDR வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக பென்ச்மார்க்கிங் தளங்களில் வெளியான தகவல்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் V1824A என்ற மாடல் நம்பரில் உறுவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இதன் டிஸ்ப்ளே ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல்களை கொண்டிருக்கும். புதிய ஐகூ ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம் தவிர 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. வேரியண்ட் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிகிறது. 
  Next Story
  ×