search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்
    X

    கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்

    கார்மின் நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் 5எஸ் சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச் மாடல்கள் - 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் மாடல்கள் அறிமுகம்.




    கார்மின் நிறுவனம் ஃபீனிக்ஸ் 5 சீரிஸ் மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. 

    கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்களில் பில்ட்-இன் ரூட் செய்யக்கூடிய டோபோகிராஃபிக்கல் மேப்ஸ், மியூசிக் பிளேலிஸ்ட்களுக்கான ஸ்டோரேஜ், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி, ரிஸ்ட் சார்ந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது. 42 மில்லிமீட்டர் முதல் 51 மில்லிமீட்டர் அளவுகளில் கிடைக்கும் ரக்கட் ஸ்மார்ட்வாட்ச்களை நேரடி சூரிய வெளிச்சத்திலும் சிரமமின்றி பயன்படுத்தக்கூடிய டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது.

    முந்தைய ஃபினிக்ஸ் 5 மாடல்களை போன்று புதிய ஸ்மார்ட்வாட்ச்களிலும் ரிஸ்ட்-சார்ந்த ஹார்ட் ரேட், மல்டிஸ்போர்ட் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேப்களை கொண்டு ரவுன்ட்-ட்ரிப் கோர்ஸ் க்ரியேட்டர் எனும் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு மேப்களில் வழங்கப்பட்டு இருக்கும் வழித்தடங்களில் ஓட்டப்பயிற்சி அல்லது சைக்கிள் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

    வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை டிராக் செய்து அவற்றை மேம்படுத்தும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிரெயினிங் ஸ்டேட்டஸ்-களை தானாக மதிப்பீடு செய்து, சில சமயங்களில் அதீத பயிற்சி செய்யும் போது, வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும். கனெக்ட் ஐகியூ கொண்டிருப்பதால், பயனர்கள் தங்களது வாட்ச்-இன் விட்ஜெட்கள், டேட்டா ஃபீல்டுகள், வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ஆப்ஸ்களை கஸ்டமைஸ் செய்ய முடியும்.

    ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டால், பயனர்கள் அழைப்பு, குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன்களை தங்களது வாட்ச்-இல் பெற முடியும். இவை மல்டி-நெட்வொர்க் சாட்டிலைட் வசதியை கொண்டிருப்பதால், ஜிபிஎஸ் இல்லாத இடங்களிலும் சிறப்பான சேவையை இது வழங்குகிறது.



    கார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 240x240 பிக்சல் சன்லைட்-விசிபிள், டிரான்ஸ்ஃப்ளெக்டிவ் மெமரி-இன்-பிக்சல் டிஸ்ப்ளே
    - சிறிய மல்டிஸ்போர்ட் ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச், இதயதுடிப்பு தொழில்நுட்பம்
    - ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல், பட்டன்கள் மற்றும் ரியர் கேஸ்
    - வாட்ச்-இல் 500 பாடல்களை சேமிக்கும் வசதி
    - ப்ளூடூத் ஹெட்போன்களுடன் இணைக்கும் வசதி
    - கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் வசதி
    - நேவிகேஷன் சென்சார்கள் 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - ரிஸ்ட்-சார்ந்த ஆக்சிமீட்டர்
    - ஸ்மார்ட்வாட்ச் மோடில் 7 நாள் பேக்கப் வழங்கும் பேட்டரி

    பிவிடி-கோட்டிங் செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் கொண்டிருக்கும் ஃபீனிக்ஸ் 5 பிளஸ் சீரிஸ் வாட்களில் சிலிகான் வாட்ச் பேன்ட் மற்றும் டைட்டானியம் பிரேஸ்லெட் வெர்ஷனில் டைட்டானியம் பெசல் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றின் விலை 699.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.47,735) முதல் துவங்கி 1149.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.78,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×