search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏர்செல் டூ ஏர்டெல் மாறிய 15 லட்சம் வாடிக்கையாளர்கள்
    X

    ஏர்செல் டூ ஏர்டெல் மாறிய 15 லட்சம் வாடிக்கையாளர்கள்

    ஏர்செல் சேவையை பயன்படுத்தி வந்த சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் சேவையின் மூலம் ஏர்டெல் நெட்வொர்க்-க்கு மாறியுள்ளனர்.
    புதுடெல்லி:

    தமிழ் நாடு மற்றும் சென்னையை சேர்ந்த சுமார் 15 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நெட்வொர்க்-க்கு மாறியுள்ளனர். தற்சமயம் தமிழகம் முழுக்க சுமார் இரண்டு கோடி வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் ஏர்செல் நெட்வொர்க்-இல் இருந்து போர்ட் அவுட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களில் சுமார் 50% பேர் ஏர்டெல் நெட்வொர்க்-ஐ தேர்வு செய்துள்ளனர் என ஏர்டெல் இந்தியா வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    'பெரும்பாலான ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் சேவையை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்களை ஏர்டெல் குடும்பத்திற்கு வரவேற்று, தலைசிறந்த சேவையை அவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்வோம். மாநிலம் முழுக்க சுமார் ஒரு லட்சம் சேவை மையங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவோம்.' என பாரதி ஏர்டெல் தமிழ் நாடு மற்றும் கேரளா பிரிவு தலைவர் மனோஜ் முரளி தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுக்க 13,000 புதிய மொபைல் பிராட்பேண்ட் மையங்களை நிறுவி இருக்கும் ஏர்டெல், வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் ஏற்ற விலையில் அதிவேக டேட்டா சேவையை வழங்க முடியும்.

    கடுமையான நிதிச்சுமை காரணமாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் தகவல் பரிமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நாளடைவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மாறியும், பலர் போர்ட் அவுட் செய்ய முடியாமலும் திணறி வருகின்றனர். முன்னதாக ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி அந்நிறுவனம் தேசிய கம்பெணிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்து இருந்தது.
    Next Story
    ×