search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் சீனாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் அதிகப்படுத்த தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபோன் மற்றும் இதர உதிரிபாகங்கள் உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

    சீனாவுக்கு அடுத்து இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற பகுதிகளில் ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நாடுகளில் ஆப்பிள் தனது உற்பத்தியை தற்போது இருப்பதை விட அதிகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    ஐபோன்

    அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனக்கான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றம் செய்யும் முடிவு எடுக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை காரணம் காட்டி சீனாவை உற்பத்திக்காக சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கும் மேற்கத்திய நிறுவனங்களையும் தங்களின் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் மேற்கொள்ளச் செய்யும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப் என 90 சதவீத சாதனங்கள் வெளி நிறுவன உற்பத்தியாளர்களால் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஷாங்காய் மற்றும் சீனாவின் இதர நகரங்களில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

    சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவை ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்ய சாதகமான சந்தையாக பார்க்கிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் பெருமளவு உற்பத்தி பணிகளை மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும். சில உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    குவால்காம் நிறுவனம் சமீபத்தில் புதிய பிளாக்‌ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிராசஸர் கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன.


    ஸ்மார்ட்போன் சிப்செட்களை உற்பத்தி செய்து வழங்கும் குவால்காம் நிறுவனம், சமீபத்தில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. இது குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன பிளாக்‌ஷிப் பிராசஸர் ஆகும். 

    புது பிராசஸர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் அசுஸ் என பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிளாக்‌ஷிப் பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து வருகின்றன.

    ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1

    அதன் படி அசுஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ரோக் போன் 6 சீரிஸ் மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று ஒன்பிளஸ் நிறுவனமும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புது ஸ்மார்ட்போன் 2022 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. 

    ஒன்பிளஸ் மற்றும் அசுஸ் நிறுவனங்களை போன்றே ரியல்மி நிறுவனமும் தனது GT2 மாஸ்டர் எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இவை தவிர மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளன.
    ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போகும் என தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.


    பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அடிக்கடி தனது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. இதே போன்று செயலியில் அவ்வப்போது வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வரிசையில், ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C மாடல்களுக்கான சப்போர்ட் அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. இது பற்றிய தகவலை, வாட்ஸ்அப் அப்டேட் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் wabetainfo தளம் வெளியிட்டு உள்ளது. 

    வாட்ஸ்அப்
    Photo Courtesy: WABetaInfo

    அந்த வலைதள தகவல்களின்படி ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை அக்டோபர் 24, 2022 முதல் நிறுத்தப்பட்டு விடும் என ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றிய தகவல் வாட்ஸ்அப் ஹெல்ப் செண்டர் வலைதள பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    அதன் படி, வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 மற்றும் அதன் பின் வெளியிடப்பட்ட வெர்ஷன்கள் சிறப்பானது, இதனை பிரந்துரைக்கிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S போன்ற மாடல்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்வது அவசியமாகி இருக்கிறது. 
    ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.


    ஐகூ நிறுவனம் நியோ6 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை கடந்த ஒரு வார காலமாக வெளியிட்டு வருகிறது. அதன்படி ஐகூ நியோ6 5ஜி மாடல் இந்தியாவில் மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஐகூ அறிவித்து இருக்கிறது. இதற்கான டீசர் அமேசான் இந்தியா வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    ஐகூ நியோ6 5ஜி மாடல் டிசைன், நிற ஆப்ஷன்கள் மற்றும் கேமரா லே-அவுட் விவரங்களை தெரிவிக்கும் டீசரை ஐகூ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. எனினும், ஐகூ நியோ6 இந்திய வேரியண்ட் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஐகூ நியோ6 5ஜி மாடல் இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 12GB ரேம், 256GB மெமரி கொண்டிருக்கிறது.

     ஐகூ நியோ6 5ஜி

    வரும் நாட்களில் புதிய ஐகூ நியோ6 5ஜி மாடல் விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படலாம். ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ6 SE ஸ்மார்ட்போனின் ரி பிராண்டு செய்யப்பட்ட மாடல் தான் இந்தியாவில் ஐகூ நியோ6 5ஜி பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சீன வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ஐகூ நியோ6 5ஜி மாடலில் மேம்பட்ட UFS 3.1 ஸ்டோரேஜ், கேஸ்கேட் கூலிங் சிஸ்டம், 4D கேம் வைப்ரேஷன் மற்றும் லீனியர் மோட்டார் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ நியோ6 5ஜி மாடலில் 6.62 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 4700mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் பேண்ட் மாடலை உருவாக்கி இருக்கிறது. புதிய பிட்னஸ் பேண்ட் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.9

    ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், மற்ற சாதனங்களிலும் சியோமி கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்திய அறிவிப்பின் படி சியோமி பேண்ட் 7 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்போவதாக சியோமி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர்களில், சியோமி பேண்ட் 7 மாடல் மே 24 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    டீசரின் படி புதிய அணியக்கூடிய சாதனம் அதன் முந்தைய மாடலை போன்றே காட்சி அளிக்கும் என தெரிகிறது. Mi பேண்ட் 7 மாடல் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே ஸ்டாண்டர்டு மற்றும் NFC  என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

    சியோமி பேண்ட் 7

    மற்ற அம்சங்களை பொருத்தவரை சியோமி பேண்ட் 7 மாடலில் 1.62 இன்ச் AMOLED 192x490 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருக்கிறது. இது முந்தைய சியோமி பேண்ட் 6 மாடலில் வழங்கப்பட்டு இருந்ததை விட 25 சதவீதம் பெரியது ஆகும். 

    ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை டிராக் செய்ய இந்த பேண்ட் 7 மாடலில் ஏராளமான அம்சங்கள் மற்றும் பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்படலாம். இதில் SpO2, இதய துடிப்பு, ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் பல்வேறு உடல் நலன் சார்ந்த விவரங்களை சேகரிக்கும் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. 
    வி நிறுவனம் புதிதாக பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையுடன் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.


    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கும் டேட்டா ஆட் ஆன் சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய பிரீபெயிட் சலுகை விலை ரூ. 151 ஆகும். இதில் மொத்தம் 8GB வரையிலான டேட்டா வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

    முன்னதாக ரூ. 82 விலையில் வி அறிவித்த பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் சோனி லிவ் மொபைல் சந்தா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெலிகாம் சந்தையில் வி நிறுவனத்துக்கு போட்டியாளரான ஏர்டெல் சமீபத்தில் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் இரண்டு சலுகைகளை அறிவித்து இருந்தது. இவற்றின் விலை ரூ. 399 மற்றும் ரூ. 899 ஆகும். இவை முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருந்தன.

    வி அதிகாரப்பூர்வ வலைதள விவரங்களின் படி புதிய ரூ. 151 பிரீபெயிட் டேட்டா ஆட் ஆன் சலுகையில் மொத்தம் 8GB டேட்டா, மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இவை தவிர இந்த சலுகையில் வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. 
    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புது Y சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

    விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ Y75 மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், யு நாட்ச் டிசைன், 44MP செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ Y75 ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.2, ஃபன்டச் ஓ.எஸ். 12 மற்றும் 4050mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    விவோ Y75 அம்சங்கள்:

    - 6.44 இன்ச் FHD+ 2400x1080 AMOLED ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G96 12nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 8GB ரேம் (+4GB விர்ச்சுவல் ரேம்) 
    - 128GB மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓ.எஸ். 12
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
    - 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2MP மேக்ரோ கேமரா, f/2.4
    - 44MP AF செல்பி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, GPS, BEIDOU, GLONASS, GALILEO
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 4050mAh பேட்டரி
    - 44W ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய விவோ Y75 ஸ்மார்ட்போன் மூன்லைட் ஷேடோ மற்றும் டேன்சிங் வேவ்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 
    அமேஸ்பிட் நிறுவனம் இந்தியாவில் தனது GTR 2 புது வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் கேசிங் கொண்டிருக்கிறது.


    அமேஸ்பிட் நிறுவனம் தனது GTR 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. 2020 டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட GTR 2 மாடலின் அம்சங்களே புது மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. புது ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் கேசிங் மற்றும் லைட்னிங் கிரே, தண்டர் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     அமேஸ்பிட் GTR 2

    அமேஸ்பிட் GTR 2 அம்சங்கள்:

    - 1.39 இன்ச் 454x454 பிக்சல் AMOLED 326PPI ஸ்கிரீன்
    - ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சப்போர்ட்
    - 90+ அதிக ஸ்போர்ட் மோட்கள்
    - ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் லெவல் டிராக்கிங்
    - பயோ டிராக்கர்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - ப்ளூடூத் 5.0 LE, வைபை (2.4GHz), GPS+GLONASS
    - 3GB மெமரி
    - மைக்ரோபோன், மூன்று மேக்னடிக் சூப்பர் லீனியர் ஸ்பீக்கப்கள் 
    - 471mAh பேட்டரி
    - 14 நாட்கள் பேட்டரி பேக்கப்

    அமேஸ்பிட் GTR 2 புது வெர்ஷனின் விலை ரூ. 11 ஆயிரத்து 999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்வாட்ச் மே 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் அமேஸ்பிட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ரூ. 10 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    புதிய நோட் 12 சீரிஸ் இரு மாடல்களை கொண்டுள்ளது. இவற்றில் மீடியாடெக் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 12 சீரிஸ்- நோட் 12 மற்றும் நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.7 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G88 மற்றும் G96 பிராசஸர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஸ்மார்ட்போனின் கேமிங் திறனை மேம்படுத்தும் வகையில் மீடியாடெக் ஹைப்பர் என்ஜின் 2.0 கேமிங் மற்றும் டார்லின்க் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய நோட் 12 ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 6GB ரேம், நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8GB ரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் இரு மாடல்களிலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், DTS சரவுண்ட் சவுண்ட், ஆண்டி-கிளேர் மேட் பினிஷ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இன்பினிக்ஸ் நோட் 12

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, AI லென்ஸ், 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. இத்துடன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    புதிய இன்பினிக்ஸ் நோட் 12 ஸ்மார்ட்போன் ஜூவல் புளூ, ஃபோர்ஸ் பிளாக், சன்செட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB+64GB மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 6GB+128GB மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 28 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 

    இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ ஸ்மார்ட்போன் சஃபையர் புளூ, ஃபோர்ஸ் பிளாக் மற்றும் ஸ்னோஃபால் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB+128GB மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 27 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் திரும்புவது பற்றிய முடிவு குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இவரின் ட்விட்டர் பதிவு வைரல் ஆகி வருகிறது.

    உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி இருந்தது. இன்றும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் வர வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    மேலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் ஊழியர்கள் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக கூறப்பட்டது. எனினும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து ஊழியர்கள் அலுவலகம் திரும்ப மேலும் சில காலம் ஆகும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. 

    இந்த விவகாரம் குறித்த தனியார் செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பதிவுக்கு, எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில், “உங்களின் உடற்பயிற்சி ஆடைகளை உடுத்திக் கொண்டு, டி.வி. பாருங்கள்,” என குறிப்பிட்டுள்ளார். உடற்பயிற்சி ஆடைகளை அணிந்து கொண்டு டி.வி. பார்ப்பதால் யாருக்கும் எந்த பயனும் இருக்க முடியாது. இதையே எலான் மஸ்க் கூறி இருக்கிறார். 

    ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து பணியாற்ற கட்டாயப்படுத்தவில்லை. எனினும், வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டம் குறித்து ட்விட்டர் ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை முந்தைய திட்டப்படி ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கும் பட்சத்தில், இந்த விவகாரம் குறித்து எலான் மஸ்க் வேறு முடிவுகளை எடுக்கலாம். 

    முன்னதாக பல சமயங்களில் சீன மக்களின் பணி கலாச்சாரம் குறித்து எலான் மஸ்க் புகழ்ந்து இருக்கிறார். மேலும் அமெரிக்கர்கள் வேலை செய்வதை தவிர்க்கவே விரும்புவர் என்றும் தெரிவித்து இருக்கிறார். ட்விட்டர் வலைதளத்தில் உள்ள போலி அக்கவுண்ட் மற்றும் பாட்களின் எண்ணிக்கை, அதன் மதிப்பை மாற்றலாம் என்பதால் ட்விட்டரை வாங்கும் முடிவை எலான் மஸ்க் ஒத்தி வைத்துள்ளார்.
    போக்கோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல். இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    போக்கோ X4 GT ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் LCD பேனல், FHD+ ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் இருவித ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், மூன்று கேமரா சென்சார்கள், 5000mAh பேட்டரி மற்றும் 67W சார்ஜிங் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.  

    போக்கோ X4 GT எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.6 இன்ச் LCD டிஸ்ப்ளே
    - மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர்
    - 6GB ரேம், 128GB மெமரி
    - 8GB ரேம், 256GB மெமரி
    - 48MP பிரைமரி கேமரா
    - 8MP அல்ட்ரா வைடு கேமரா
    - 2MP லென்ஸ்
    - 20MP செல்பி கேமரா
    - 5000mAh பேட்டரி
    - 67W பாஸ்ட் சார்ஜிங்

    புதிய போக்கோ X4 GT ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் IMEI வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. மேலும் போக்கோ X4 GT மாடல் ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் மே 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ஹூவாய் நிறுவனத்தின் மேட் Xs 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். வழங்கப்படவில்லை. இதன் விலை 1999 யூரோக்கள் என துவங்குகிறது.


    ஹூவாய் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மேட் Xs 2 ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதில் சக்திவாய்ந்த ஹார்டுவேர், தலைசிறந்த கேமரா செட்டப், பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

     ஹூவாய் மேட் Xs 2

    ஹூவாய் மேட் Xs 2 அம்சங்கள்:

    புதிய ஹூவாய் மேட் Xs 2 மாடலின் மிகப் பெரிய அப்டேட் ஆக அதன் டிசைன் உள்ளது. சந்தையில் கிடைக்கும் மற்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட புதிய மேட் Xs 2 மாடலில் வெளிப்புறமாக மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இதில் உள்ள ஸ்கிரீன் எந்தளவு உறுதியாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    இந்த மாடலில் 6.5 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP டெலிபோட்டோ சென்சார், 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 10.7MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4600mAh பேட்டரி, 66W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் ஹார்மனி ஓ.எஸ். 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.
    ×