search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
     

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவன சாதனங்கள் உற்பத்திக்காக சீனாவை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆப்பில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் முடிவு குறித்த புது தகவலை பிரபல ஆப்பிள் வல்லுனர் மிங் சி கியோ தெரிவித்து உள்ளார்.

    சீனாவில் இருந்து ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றும் முடிவு சிறப்பான ஒன்று தான், ஆனால் இவ்வாறு செய்யும் போது சீனாவை சேர்ந்த ஆப்பிள் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் போது வீண் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக ஆப்பிள் தனது சாதனங்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

     ஐபோன்

    இதோடு சீனாவுக்கு அடுத்தப்படியாக உற்பத்திக்கான சிறந்த சூழல் கொண்ட நாடுகளில் வியட்நாம் முதன்மையானது என அவர் தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் அரசியல் மோதல்கள் காரணமாகவும் ஆப்பிள் தனது உறிபத்தியை சீனாவில் இருந்து மாற்ற முடிவு எடுத்துள்ளது. 

    இதுகுறித்து வெளியான மற்ற தகவல்களின் படி ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் வியட்நாமில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். முந்தைய தகவல்களில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 
    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11T  ப்ரோ சீரிஸ்- ரெட்மி நோட் 11T  ப்ரோ மற்றும் நோட் 11T  ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இரு மாடல்களின் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரெட்மி நோட் 11T  ப்ரோ சீரிஸ் இந்தியாவில் ரெட்மி K50i சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ரெட்மி நோட் 11T  ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் போக்கோ X4 GT சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரெட்மி நோட் 11T  ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி K50i ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

     ரெட்மி நோட் 11T ப்ரோ

    ரெட்மி நோட் 11T  ப்ரோ மற்றும் நோட் 11T  ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரு மாடல்களிலும் முறையே 120Hz மற்றும் 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி நோட் 11T  ப்ரோ சீரிசில் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 11T  ப்ரோ சீரிசின் பிரைமரி கேமராவுடன் 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 16 MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனில் 4400mAh பேட்டரி, 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி, நோட் 11T ப்ரோ பிளஸ் மாடலில் 5080mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 
    ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேர பிளேடைம் வழங்குகிறது.

    இந்திய சந்தையில் முன்னணி ஆட்யோ சாதனங்கள் உற்பத்தியாளராக விளங்கும் ட்ரூக் நிறுவனம் புதிய F1 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ட்ரூக் நிறுவனம் ட்ரூக் பட்ஸ் S2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய ட்ரூக் F1 இயர்பட்ஸ் மாடல் ப்ரோடெக்டிவ் கேஸ் மற்றும் சப்டைல் டிஜிட்டல் பேட்டரி ரீட்-அவுட் உள்ளது. இத்துடன் இன்ஸ்டண்ட் பேரிங், அதிவேக கனெக்டிவிட்டி வழங்கும் ப்ளூடூத் 5.3,, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-இல் கேமிங் செய்வதற்கென பிரத்யேக மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ட்ரூக் பட்ஸ் F1

    இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. மேலும் இதில் டேப் டு கண்ட்ரோல் மற்றும் ஹை பெடிலிட்டி ஆடியோ மற்றும் AAC கோடெக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ட்ரூக் F1 இயர்பட்ஸ் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வசதி உள்ளது. 

    இந்தியாவில் புதிய ட்ரூக் பட்ஸ் F1 இயர்பட்ஸ் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 1,299 என மாறி விடும்.  
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. 

    அதிகம் அறியப்படும் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் சாம்சங் கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்களை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே, செங்குத்தாக பொருத்தப்படும் மூன்று கேமரா சென்சார்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், போனின் இடது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்கள் வழங்கப்படுகிறது.

     சாம்சங் M13 5ஜி

    சாம்சங் கேலக்ஸி M13 5ஜி மாடல் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் எப்.சி.சி. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் SM-M135M மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்தது. 

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M13 5ஜி 6.5 இன்ச் புல் HD+ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 6GB, 128GB மெமரி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.
    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் மீண்டும் சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

    நிறுவனங்கள் சார்பில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (ARPU) அதிகப்படுத்தும் முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் தங்களது சலுகைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

     ஏர்டெல்

    விலை உயர்வு அமலுக்கு வந்தாலும், மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. புது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த விலை உயர்வை கொண்டு மூன்று முன்னணி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான கோபால் விட்டல், இந்த ஆண்டு டெலிகாம் சேவை கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். எனினும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என அவர் தெரிவித்து இருந்தார்.
    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய Mi ஸ்மார்ட் பேண்ட் 7 மற்றும் ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    சியோமி நிறுவனம் Mi ஸ்மார்ட் பேண்ட் 7 மற்றும் ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ மாடல்களை சீன சந்தையில் நேற்று அறிமுகம் செய்தது. புதிய பிட்னஸ் பேண்ட்: ஸ்டாண்டர்டு வெர்ஷன் மற்றும் என்.எப்.சி. வெர்ஷன் என இரு மாடல்களில் கிடைக்கிறது. இதில் பெரிய AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நலன் சார்ந்த மாணிட்டரிங் அம்சங்கள் உள்ளிட்டவை வழங்ப்பட்டு உள்ளது. 

    ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ

    ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ மாடலில் 360 டிகிரி சரவுண்ட் சவுண்ட், அதிகபட்சமாக 36 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டிரான்ஸ்பேரன்சி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி பட்ஸ் 4 ப்ரோ மாடல் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை CNY 399 இந்திய மதிப்பில் ரூ. 4 ஆயிரத்து 650 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    Mi ஸ்மார்ட் பேண்ட் 7 மாடலின் ஸ்டாண்டர்டு வெர்ஷன் விலை CNY 249 இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 900 என்றும் என்.எப்.சி. வெர்ஷன் விலை CNY 299 இந்திய மதிப்பில் ரூ. 3 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Mi ஸ்மார்ட் பேண்ட் 7 மாடல்: பிளாக், புளூ, கிரீன், ஆரஞ்சு, பின்க் மற்றும் வைட் என மொத்தம் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சம்மர் லிமிடெட் எடிஷன் ரிஸ்ட் பேண்ட்களையும் வாங்க முடியும்.  
    டுனெஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கும் புது ஹெட்செட் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் சிர, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற சேவைகளை வழங்குகிறது.

    லைப்ஸ்டைல் சாதனங்கள் பிராண்டு டுனெஸ் இந்திய சந்தையில் பீட்ஸ் B60 என அழைக்கப்படும் ஓவர்ஹெட் ப்ளூடூத் ஹெட்செட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஹெட்செட் 40mm ஹெச்.டி. மேக்ஸ் பேஸ் டிரைவர், பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம், நீண்ட நேர பயன்பாடுகளின் போதும் சவுகரிய அனுபவத்தை வழங்கும் குஷன்களை கொண்டிருக்கிறது. 

    புதிய டுனெஸ் பீட்ஸ் B60 மாடலில் 400mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 12 மணி நேரத்திற்கான பிளே டைம், 15 மணி நேரத்திற்கான மியூசிக் பிளே, 15 மணி நேரத்திற்கான டாக்டைம், மைக்ரோ எஸ்.டி.. எப்.எம்., IPX5 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, சிரி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ப்ளூடூத் 5.0 போன்ற அம்சங்கள் உள்ளன.

     டுனெஸ் பீட்ஸ் B660

    டுனெஸ் பீட்ஸ் B60 அம்சங்கள்:

    - 40mm HD MAXX பேஸ் டிரைவர்கள்
    - ப்ளூடூத் 5
    - மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
    - எப்.எம். சப்போர்ட்
    - IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட்
    - 400mAh பேட்டரி
    - மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் 
    - 15 மணி நேர மியூசிக் பிளேபேக்
    - 15 மணி நேர டாக்டைம்

    டுனெஸ் பீட்ஸ் B60 மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 ஆகும். இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.


    சியோமி நிறுவனம் சீன சந்தையில் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இதில் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 30/50/60/90Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 5ஜி பிராசஸர், 5000mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் 48MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், அதிகபட்சம் 6GB ரேம், 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ரெட்மி நோட் 11SE

    ரெட்மி நோட் 11SE அம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், அடாப்டிவ் 30/50/60/90Hz ரிப்ரெஷ் ரேட்
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் 
    - மாலி-G57 MC2 GPU
    - 4GB / 8GB LPDDR4x ரேம்
    - 128GB (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
    - 48MP பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2MP போர்டிரெயிட் சென்சார், f/2.4
    - 8MP செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000mAh பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக் மற்றும் டீப் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 640 என துவங்குகிறது. இதன் 8GB+128GB மெமரி மாடல் விலை 1299 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரத்து 565 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிதாக சர்வதேச சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 599 என துவங்குகிறது.


    சர்வதேச பயணம் தற்போது மிக எளிமையாகி விட்டது. இதன் காரணமாக பல இந்தியர்கள் வியாபாரம் மற்றும் ஓய்வு போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வி நிறுவனம் புதிய சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    சர்வதேச பயணத்தை எளிமையாக்க, வி ரோமிங் சலுகைகள் உதவுகின்றன. சமீபத்தில் வி நிறுனம் பூ. 151 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருந்தது. இதில் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ரூ. 82 சலுகையில் சோனி லிவ் சந்தா வழங்கப்பட்டது.
     
    வி போஸ்ட்பெயிட் பயனர்கள் ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிரேசில் மற்றும் இதர நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது வி அன்லிமிடெட் சர்வதேச ரோமிங் சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றின் விலை ரூ. 599 என துவங்கி, அதிகபட்சம் ரூ. 5 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    மோட்டோரோலா நிறுவனம் ஸ்னாப்டிபாகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட தனது ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடலில் 200MP கேமரா வழங்கப்பட இருக்கிறது.


    குவால்காம் நிறுவனம் கடந்த வாரம் தனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரை அறிமுகம் செய்தது. ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது பிராசஸர் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக ஏராளமான நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்த வரிசையில், தற்போது மோட்டோரோலா நிறுவனமும் இணைந்து இருக்கிறது. 

    மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் புது டீசர்களின் படி மோட்டோரோலா நிறுவனமும் புதிய ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. இத்துடன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது. 

    மோட்டோ ஸ்மார்ட்போன்

    ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் மற்றும் 200MP பிரைமரி கேமரா கொண்ட மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாத வாக்கில் அறிமுகமாகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 200MP சாம்சங் ISOCELL HP1 சென்சார் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் மோட்டோரோலா பிராண்டியர் 22 பெயரில் பலமுறை வெளியாகி உள்ளன.

    முதற்கட்டமாக சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் X30 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா பெயரில் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து கார்டு மூலம் பேமண்ட் ஏற்க தடை விதித்து உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    பேமண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை தங்களின் சர்வர்களில் சேமிக்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி 2020 ஆண்டு வாக்கில் உத்தரவிட்டு அதற்கான கால அவகாசத்தை வழங்கி இருந்தது. 

    இந்த நிலையில், கார்டு ஸ்டோரேஜ் மற்றும் டோக்கென் வழங்கும் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரிந்துரைகளை ஏற்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டது. இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் புது சாதனங்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். 

    இதுமட்டுமின்றி இன்-ஆப் பர்சேஸ்களுக்கு பணம் செலுத்துவோர் ரொக்கம் தவிர்த்து யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    “ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சந்தா மற்றும் ஆப்பிள் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது,” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதோடு இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் இனி ஆப்பிள் சர்வர்களில் சேமிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 
    இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.


    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய புதிய ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அம்சங்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 80Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுனிசாக் T610 பிராசஸர், 4GB ரேம், 3GB விர்ச்சுவல் ரேம், பின்புறம் கைரேகை சென்சார், 6000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே

    இன்பின்க்ஸ் ஹாட் 12 பிளே அம்சங்கள்:

    - 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன்
    - பாண்டா MN228 கிளாஸ் பாதுகாப்பு
    - ஆக்டா கோர் 12nm UNISOC T610 பிராசஸர்
    - மாலி-G52 GPU
    - 4GB LPDDR4x ரேம்
    - 64GB (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 10
    - 13MP பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்.இ.டி. பிளாஷ்
    - டெப்த் சென்சார்
    - 8MP செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. பிளாஷ்
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், DTS ஆடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 6000mAh பேட்டரி
    - 10W சார்ஜிங்

    புதிய இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக், ஹாரிசான் புளூ, ஷேம்பெயின் கோல்டு மற்றும் டேலைட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மே 30 ஆம் தேதி துவங்குகிறது.
    ×