search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் வேறு பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் தனது ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஒன்பிளஸ் ஏஸ் ஸ்மார்ட்போன் 150W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு, இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 10R பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் 10R லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இந்திய IMEI டேட்டாபேஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் PGZ110 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விரைவில் ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். 

     ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன்

    ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் அல்லது ஒன்பிளஸ் 10R லைட் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் எடிஷன் மாடலில் 6.59 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், மாலி G10 MC6 GPU, 8GB /12GB ரேம், 128GB / 256GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளன.
    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சியோமி ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    ரெட்மி நம்பர் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 5000mAh பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 6.58 இன்ச் FHD+ 90Hz எல்.சி.டி. டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4GB ரேம், 64GB இண்டர்னல் மெமரி, 50MP பிரைமரி கேமரா, 2MP டூயல் கேமரா, 5MP செல்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களை கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    ரெட்மி 11 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    -  6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட் எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
    - மாலி G57 MC2 GPU
    - 4GB LPDDR4x ரேம், 64GB UFS2.2 இண்டர்னல் மெமரி
    - 6GB LPDDR4x ரேம், 128GB UFS2.2 இண்டர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI
    - 50MP பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2MP போர்டிரெயிட் கேமரா, f/2.4
    - 5MP செல்பி கேமரா 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப் சி
    -5000mAh பேட்டரி
    - 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி 

    இந்தியாவில் ரெட்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் 4GB+64GB மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என துவங்கும் என தெரிகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அசத்தலான மூன்று ஜியோஃபை சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை மாதாந்திர டேட்டா பலன்களை வழங்குகின்றன.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூன்று ஜியோஃபை சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 249, ரூ. 299 மற்றும் ரூ. 349 ஆகும். புது சலுகைகளுடன் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கான வேலிடிட்டி மற்றும் 50GB வரையிலான அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

    இத்துடன் இத்துடன் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் டாங்கிலை வாடிக்கையாளர்கள் பயன்படித்தி முடித்தப் பின் திரும்ப வழங்க வேண்டும். இந்த சலுகை வியாபாரங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஜியோஃபை போஸ்ட்பெயிட் சலுகைகள் 18 மாதங்களுக்கு லாக்-இன் பிரீயட் முறையில் வழங்கப்படுகிறது.

     ஜியோஃபை

    அதாவது பயனர்கள் ஒரு முறை இந்த சலுகையை தேர்வு செய்தால் 18 மாதங்களுக்கு அதில் இருந்து வெளியேற முடியாது. ஜியோ வலைதள விவரங்களின் படி புதிய ஜியோஃபை புது போஸ்ட்பெயிட் சலுகைகள், டேட்டா பலன்களை மட்டுமே வழங்குகின்றன. இதில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முதல் முறை இந்த சலுகைகளை தேர்வு செய்யும் போது ரூ. 200 செலுத்த வேண்டும்.

    புதிய ஜியோஃபை ரூ. 249 சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 30GB டேட்டா வழங்குகிறது. இதனை பயனர்கள் 18 மாதங்களுக்கு வாங்கிக் கொள்ள முடியும். இதனுடன் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோஃபை ரூ. 299 சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 40GB டேட்டா வழங்குகிறது. 

    ரூ. 349 ஜியோஃபை சலுகை மாதாந்திர வேலிடிட்டி மற்றும் 50GB டேட்டா வழங்குகிறது. மற்ற இரு சலுகைகளை போன்றே இதனுடன் பயன்படுத்தியதும் திரும்ப வழங்கும் வகையில் ஜியோஃபை டாங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது. 
    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 39 சதவீதம் வரை குறைக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட இருக்கின்றன.

    சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு குறைவு, மின்சாதனங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் போன்ற காரணங்களால் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    இந்த ஆண்டு மட்டும் 310 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை 280 மில்லியனாக குறைக்க சாம்சங் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட பத்து சதவீதம் குறைவு ஆகும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு உற்பத்தி 35 சதவீதம் சரிவடையும் என ஷின்ஹன் முதலீட்டு நிறுவன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது காலாண்டு உற்பத்தியில் பத்து சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி Z போல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனிற்கான ப்ரோடெக்டிவ் கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அளவீடுகளில் சாம்சங் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது.

    தற்போதைய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் வெளிப்புற ஸ்கிரீன் 23:9 அளவிலும், உள்புற டிஸ்ப்ளே 6:5 அளவிலும் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது முந்தைய மாடலை விட அளவில் சிறியதாக இருக்கும் என தெரிகிறது. அளவீடுகள் மட்டுமின்றி புதிய கேலக்ஸி Z போல்டு 4 மாடல் ஓரளவு மெல்லியதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    முந்தைய தகவல்களில் கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் லென்ஸ் தான் புது கேலக்ஸி Z போல்டு 4 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன் படி சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    இதே போன்று வெளியான மற்றொரு தகவலில் புதிய கேலக்ஸி Z போல்டு 4 ஸ்மார்ட்போனில் S பென் ஸ்டைலஸ் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் கேலக்ஸி Z போல்டு 4 மாடலின் டிஸ்ப்ளே, கேலக்ஸி S22 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டதை விட அதிக ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டது.
    போக்கோ நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் F4 GT மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    போக்கோ நிறுவனம் விரைவில் பல்வேறு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. நேற்று போக்கோ F4 GT ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. லண்டனில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஃபிளாக்‌ஷிப் மாடல் என்ற வகையில் போக்கோ F4 GT மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ F4 GT மாடலில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க போக்கோ F4 GT மாடலில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP மேக்ரோ சென்சார், 20MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     போக்கோ F4 GT

    போக்கோ F4 GT மாடலில் 4700mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த MIUI 13 கஸ்டம் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் 3.0 மற்றும் டூயல் வேப்பர் சேம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் போக்கோ F4 GT மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். எனினும், இதுபற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஃபிளாக்‌ஷிப் மாடல் என்பதால், இந்திய சந்தையில் இதன் விலை சற்றே அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. 

    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதிதாக எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S வாங்க இது சரியான தருணம் ஆகும்.


    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டது. சமீபத்திய விலை குறைப்பின் படி எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S விலை தற்போது ரூ. 31 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகள் மற்றும் கூடுதல் தள்ளுபடிகளை சேர்க்கும் போது எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் S விலை மேலும் குறைய வாய்ப்புகள் உண்டு.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடல் தற்போது ரூ. 31 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உண்மை விலை ரூ. 34 ஆயிரத்து 990 என்ற நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     எக்ஸ்பாக்ஸ்

    இதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சம் ரூ. 1,500 வரை கூடுதல் தள்ளுபடி, 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி மற்றும் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலில் மெல்லிய பாடி, வெலாசிட்டி ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இதில் 512GB NVMe SSD வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் S மாடலுடன் எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கண்ட்ரோலர் ஒன்றும் வழங்கப்படுகிறது. 

    வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை ஹேக்கர்கள் புது வழிமுறைகளை கொண்டு அபகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
     

    வாட்ஸ்அப் செயலியில் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்களின் பல்வேகறு புதுப்புது யுக்திகளில் ஏமாறும் பொது மக்கள் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வரிசையில் ஹேக்கர்கள் கையாளும் புது வழிமுறை பற்றி பாதுகாப்பு ஆய்வாளர்கள் விளக்கி உள்ளனர். அதன்படி ஒற்றை போன் கால் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை அபகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    சைபர் அச்சறுத்துல்கள் பற்றி கணிப்புகளை வெளியிட்டு வரும் கிளவுட்செக் எனும் ஏ.ஐ. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தான் வாட்ஸ்அப் செயலியில் வரும் புது அச்சுறுத்தல் பற்றி தெரிவித்து இருக்கிறார். அதன்படி ஹேக்கர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து பேசுவோர் 67 அல்லது 405 என துவங்கும் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, அவர்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி, ஹேக்கர்கள் வசம் சென்று விடும். 

    முதலில் ஹேக்கரிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் அதன் பின் 67 அல்லது 405 என துவங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள ஹேக்கர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி விடும். 

     கோப்புப்படம்

    ஹேக்கர் தரப்பில் பயனர்களுக்கு வழங்கப்படும் மொபைல் எண் ஏர்டெல் மற்றும் ஜியோ சேவையில் கால் பார்வேர்டிங் செய்வதற்கான எண் ஆகும். இன் மூலம் பயனர்களுக்கு வரும் அழைப்புகள் தாங்கள் வழங்கும் மற்றொரு மொபைல் எண்ணிற்கே வரும். வாட்ஸ்அப் சேவையை பதிவு செய்யும் போது, ஓ.டி.பி. ஆப்ஷன் கேட்கப்படும். உங்களின் போன் என்கேஜ்டில் இருந்தால் ஓ.டி.பி. ஹேக்கர்களின் மாற்று மொபைல் எண்ணிற்கே அனுப்பப்படும். இதன் மூலம் தான் ஹேக்கர்கள் பயனர் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை  பறித்துக் கொள்கின்றனர்.

    பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் இதே போன்ற எண்களையே வைத்து இருப்பதால், இந்த வழிமுறை சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கான ஆபத்து அதிகம் தான். இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருக்க தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்புகளை ஏற்காமல் இருப்பதே நல்லது.
    கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலின் புது வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு மாடலின் வெளியீடு இந்த ஆண்டு நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் பிக்சல் போல்டு ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கிறது. அளவில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z போல்டு 3 மாடலின் அளவில் இருக்கும் என்றும் இதில் LTPO மற்றும் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் அதிகபட்சம் 120Hz வரை வழங்கப்படும் என தெரிகிறது. 

     மடிக்கக்கூடிய பிக்சல் போன்

    கூகுள் பிக்சல் போன் மாடலில் 7.6 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இந்த மாடல் எந்த மாதிரியாக மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடல் செங்குத்தாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு 12L ஓ.எஸ்-ஐ வெளியிட்டது. இது டேப்லெட், மடிக்கக்கூடிய மற்றும் குரோம் ஓ.எஸ். சாதனங்களுக்காக ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு 12 வெர்ஷன் கொண்டிருக்கிறது. 
    போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.


    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய போட் நியோ வேவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் ப்ரோ மற்றும் போட் வேவ் லைட் மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் போட் அறிமுகம் செய்து இருக்கும் மூன்றாவது வேவ் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச் இது ஆகும். புதிய போட் வேவ் நியோ மாடல் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    போட் வேவ் நியோ மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் ஃபிட்னஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது. போட் வேவ் நியோ மாடலில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆரோக்கியம் மற்றும் பிட்னஸ் அம்சங்கள், ஒரு வார பேட்டரி லைஃப், ஸ்மார்ட் மற்றும் கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

     போட் வேவ் நியோ

    போட் வேவ் நியோ அம்சங்கள்:

    - 1.69 இன்ச் 454x454 பிக்சல் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே
    - 24/7 இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
    - ஸ்டிரெஸ் டிராக்கர், அக்செல்லோமீட்டர், ஸ்லீப் டிராக்கர்
    - பத்து ஸ்போர்ட்ஸ் மோட்கள்
    - IP68 சான்று
    - ப்ளூடூத் கனெக்டிவிட்டி
    - 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    புதிய போட் வேவ் நியோ ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் பர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  
    இந்திய ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சாதனங்கள் பிராண்டு ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஸ்மார்ட் எலெக்டிரானிக் சாதனங்களை அறிமுகம் செய்யும் பிராண்டான ஸ்வாட் இந்திய சந்தையில் ஏர்லிட் 005 (AirLIT 005) பெயரில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஏர்லிட் 005 இயர்பட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    வித்தியாசமான வடிவம் கொண்டு இருக்கும் புதிய ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளுக்கு சோர்வை ஏற்படுத்தாது.

     ஸ்வாட் ஏர்லிட் 005

    ஸ்வாட் ஏர்லிட் 005 மாடலில் இன் இயர் ரக இயர்பட் மற்றும் சிலிகான் டிப்கள் உள்ளன. இந்த இயர்பட் IPX4 ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, டச் கண்ட்ரோல் உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது மற்றும் அழைப்புகளை எளிமையாக மேற்கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டுள்ளது. 

    இதனை சார்ஜ் செய்தால் 5.5 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ்-ஐ சேர்க்கும் போது மொத்தத்தில் 12 மணி நேர பேக்கப் கிடைக்கும். ஸ்வாட் ஏர்லிட் 005 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அறிமுக விலை ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.


    இந்தியாவில் ஐபோன் 12 மினி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். அந்த வகையில் ஐபோன் 12 மினி மாடல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை.

     ஐபோன் 12 மினி
     
    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 12 மினி 64GB விலை ரூ. 49 ஆயிரத்து 999 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 12 மினி மாடலுக்கு வங்கி சலுகையாக ரூ. 1500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர ஐபோன் 12 மினி மாடலுக்கு வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.

    ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் புதிய ஐபோன் 12 மினி 64GB மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 12 மினி 64GB மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 12 மினி 256GB மாடல் ரூ. 64 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். 
    ×