search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லம்போர்கினி ஹரிகேன் RWD கூப்"

    போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் மாடல் ஏலத்தில் பல கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது.
    கனடா:

    போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் ஏலத்தில் 7,15,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.5.76 கோடி) விற்பனையாகியுள்ளது. 

    கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தைக்கு இந்த லம்போர்கினி கார் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஆட்டோமொபில் லம்போர்கினி சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ் காரில் தனது கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    மான்ட் கார்லோவில் மே 12-ம் தேதி நடைபெற்ற ஏலம் ஆர்எம் சோத்பி எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. முன்னதாக பலமுறை வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை இந்நிறுவனம் ஏலத்தில் விற்றிருக்கிறது. அந்த வகையில் போப் பிரான்சிஸ் லம்போர்கினி டாப் 10 பட்டியில் இடம்பிடித்துள்ளது.

    போப் பிரான்டிஸ் பயன்படுத்தி வந்த லம்போர்கினி ஹரிகேன் மாடல் பியான்கோ மொனோசிரஸ் வைட் ஷேட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் கியாலோ டிபெரினோ ஸ்டிரைப்கள் மற்றும் வேட்டிக்கன் நகர கொடிகளை தழுவிய நிறங்களில் டீடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. RWD கூப் மாடலில் டைமன்ட் ஃபினிஷ் செய்யப்பட்ட 20 இன்ச் கியானோ வீல்கள் மற்றும் நீரோ கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் இருக்கைகள் பியான்கோ லெடா ஸ்போர்டிவோ லெதர் மூலம் மூடப்பட்டு, ஹெட்ரெஸ்ட்களில் லம்போர்கினி கிரெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆட் பென்சோனம் எனும் லம்போர்கினியின் கஸ்டமைசேஷன் குழுவினரால் உருவாக்கப்பட்ட நிலையில், இதன் ஹூடில் போப் கையெழுத்திட்டிருந்தார்.



    மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், லம்போர்கினி ஹரிகேன் RWD மாடலில் 5.2 லிட்டர் V10 இன்ஜின் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின் 576 பிஹெச்பி @8000 ஆர்பிஎம், 540 என்எம் டார்கியூ @6500 ஆர்பிஎம் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    போப் பயன்படுத்திய இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் செல்லும் என்பதோடு அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    ஏலத்தொகை மொத்தமும் திருத்தந்தை போப் பிரான்சிஸ் இடம் வழங்கப்பட்டு, இவை பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட இருக்கிறது. இந்த தொகையின் ஒருபங்கு போப் ஜான் XXIII சமூகத்திற்கு வழங்கப்படும், இந்த சமூகம் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு உதவி வருகிறது.
    ×