search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே.டி.எம். 790 டியூக்"

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கே.டி.எம். நிறுவனத்தின் 790 டியூக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம். #KTM790Duke



    கே.டி.எம். 790 டியூக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஏப்ரல் 2019 இல் அறிமுகமாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் வெளியீடு ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இத்தாலியில் நடைபெற்ற 2017 EICMA மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கே.டி.எம். 790 டியூக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. எனினும், இதன் இந்திய வெளியீடு தொடர்ந்து ஒத்துவைக்கப்படுகிறது.

    புதிய மோட்டார்சைக்கிளின் உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பூனேவில் உள்ள கே.டி.எம். ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக 100 கே.டி.எம். 790 டியூக் யூனிட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.



    சிறிய பாகங்களான ஸ்விட்ச்கியர், லைட்கள், லிவெர்கள், பெடல்கள் மற்றும் வைரிங் உள்ளிட்டவை இந்திய நிறுவனங்களிடம் இருந்து 
    வாங்கி பயன்படுத்தப்படுகிறது. எனினும், இவை அனைத்தும் கே.டி.எம். பயன்படுத்தும் சர்வதேச தரத்திற்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.

    கே.டி.எம். 790 டியூக் மாடலில் லிக்விட் கூல்டு, 799சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102.5 பி.ஹெச்.பி. பவர், 87 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 43 எம்.எம். WP அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் WP அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது.

    பிரேக்கிங் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். வசதி ஸ்டான்டர்டு உபகரணமாக வழங்கப்படுகிறது.
    ×