search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200"

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இம்பல்ஸ் மோட்டார்சைக்கிளுக்குப் பதிலாக இரண்டு புதிய ரக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் ‘எக்ஸ்பல்ஸ் 200டி’ மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. அந்த வகையில் இதன் விநியோகம் ஜூன் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.

    இந்த இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களிலும் 199.6 சி.சி. திறன் கொண்டிருக்கின்றன. ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டவை. இவை இரண்டிலும் கார்புரேட்டர் மாடலுக்குப் பதிலாக ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் மாடலைக் கொண்டதாக என்ஜின் உள்ளது. ஏ.பி.எஸ்., எல்.இ.டி. விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி ஆகியவற்றைக் கொண்டது.

    இதில் சாகசப் பயணத்துக்கான எக்ஸ்பல்ஸ் 200டி மாடலின் எக்ஸாஸ்ட் பைப் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் சக்கரங்கள் வயர் ஸ்போக்ஸ் மாடலாகும். முன் சக்கரம் 21 அங்குலம் கொண்டதாகவும், பின் சக்கரம் 18 அங்குலம் கொண்டதாகவும் உள்ளது. 



    சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பறம் டெலஸ்கோப்பிக் போர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான மோட்டார் சைக்கிளை விட இதன் உயரம் அதிகம். எக்ஸ்பல்ஸ் 200 மாடலைக் காட்டிலும் 30 மி.மீ. உயரம் குறைவு. இதில் 17 அங்குல அலாய் சக்கரம் எம்.ஆர்.எப். நைலோகிரிப் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இம்பல்ஸ் மாடல் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இதன் உற்பத்தியை நிறுத்த வேண்டியதாயிற்று. ஆனால் தற்போது அறிமுகமாக உள்ள இரண்டு மாடல்களுமே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் இது எடை குறைந்த வாகனமாக இருக்கும்.

    ஏற்கனவே சாகச மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்பீல்டு ஹிமாலயன், பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். ஆகியன உள்ளன. எடை குறைவு, சிறப்பான பிக்கப் ஆகியன இதற்கு பெருமளவு வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடல் தயாரான அதே பிளாட்பார்மில் இது தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் இதன் வடிவமைப்பு, செயல்பாடு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இதுபோல மேலும் பல மாடலை இதே பிளாட்பார்மில் உருவாக்கவும் ஹீரோ திட்டமிட்டு உள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவு விற்பனையை பதிவு செய்துள்ளது. #Xtreme200R #Motorcycle



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் டிசம்பர் 2018 மாதத்தில் மட்டும் சுமார் 1438 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. 

    விற்பனையை பொருத்தவரை ஹீரோ நிறுவனத்தின் மற்ற மோட்டார்சைக்கிள்களை விட இது குறைவு தான் என்றாலும் 200சிசி பிரிவில் இது குறிப்பிடத்தக்கவொன்றாக பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. 200சிசி வாகன பிரிவில் கே.டி.எம். 200 டியூக், பஜாஜ் பல்சர் என்.எஸ். 200 மற்றும் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 உள்ளிட்ட மாடல்கள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. 

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது. 
    யு. எம். மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் துவக்கநிலை அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #adventure #motorcycles



    யு. எம். மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் துவக்க நிலை மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. டி.எஸ்.ஆர். அட்வென்சர் 200 என்ற பெயரில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக இருக்கிறது. 

    இந்தியாவில் புதிய டி.எஸ்.ஆர். அட்வென்சர் 200 மோட்டார்சைக்கிளின் விலை ரூ. 1.39 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்படும் அனைத்து சிறப்பம்சங்களும் இதில் வழங்கப்படுகின்றன. 


    புகைப்படம் நன்றி: BikeWale

    புதிய டி.எஸ்.ஆர். அட்வென்சர் 200 மோட்டார்சைக்கிளில் 196 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இது ஏர் கூல்டு 2 வால்வு, கார்புரேட்டர் ஒற்றை சிலிண்டர் உள்ளிட்டவை என்ஜினின் சிறப்பம்சமாக இருக்கிறது. இந்த என்ஜின் 16 பி.ஹெச்.பி. பவர் @8,500 ஆர்.பி.எம். மற்றும் 16 என்.எம். டார்க் @6,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.

    இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இதன் சிறப்பம்சமாகும். சாகச மோட்டார் சைக்கிளுக்குரிய விண்ட் ஸ்கிரீன் இதில் உள்ளது. 

    இந்தியாவில் டி.எஸ்.ஆர். அட்வென்சர் 200 மோட்டார்சைக்கிள் ஆலிவ் கிரீன், மிட்நைட் பிளாக், பிரிக் ரெட், ஆக்டேன் புளூ ஆகிய நான்கு வித நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஸ்பை விவரங்களை பார்ப்போம். #HERO #motorcycle



    ஹீரோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அட்வென்ச்சர் டூரர் மாடல்களான எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி மாடல்கள் சோதனை செய்யப்படுகிறது. இரண்டு மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மிலானில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்ட போது இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதைக் கருத்தில் கொண்டே இப்போது எக்ஸ்பல்ஸ் தயாரிப்பில் ஹீரோ நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

    புதிய எக்ஸ்பல்ஸ் 200 ஆஃப்-ரோடு மாடலாகவும், எக்ஸ்பல்ஸ் 200டி ரோட் சார்ந்த மாடலாக இருக்கிறது. இம்முறை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் எக்ஸ்பல்ஸ் 200 (மேட் ரெட்) மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 டி (ரெட்) மாடல்கள் தெளிவாக தெரிகிறது. 

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலில் 17 இன்ச் சக்கரங்களை கொண்டிருக்கிறது. வழக்கமான மாடலில் 21 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Autocarindia

    ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ்., எல்.இ.டி. லைட்கள் மற்றும் ப்ளூடூத், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதிகள் நிறைந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    புதிய எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளில் 198சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர் @8000 ஆர்.பி.எம். மற்றும் 17.1 என்.எம். டார்கியூ @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

    இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் 200 டி மோட்டார்சைக்கிளை ஹீரோ மோட்டோகார்ப் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என்றும் இதன் விலை ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    புதிய எக்ஸ்பல்ஸ் 200 மாடல் இந்தியாவில் பஜாஜ் 220எஃப், டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 2004வி மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்த எக்ஸ்ட்ரீம் விலை இந்தியாவில் மாற்றப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #HERO #motorcycle



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    முன்னதாக ஹீரோ மோட்டோகார்ப் வலைத்தளத்தில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை ரூ.88,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், இதன் விலை தற்சமயம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை ரூ.1,900 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ.89,900 என மாற்றப்பட்டுள்ளது.

    புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. 



    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது. 

    இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4v மற்றும் பஜாஜ் பல்சர் 200NS விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் விலை அடிப்படையில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மற்ற மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கலாம்.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு விவரங்கள் கிடைத்திருக்கிறது. #motorcycle
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான எக்ஸ் பல்ஸ் 200 மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த மோட்டார்சைக்கிள் டிசம்பர் 2018-இல் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் எக்ஸ் பல்ஸ் 200 மாடல் மூன்று மாதங்கள் தாமதமாக அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. புதிய மாடல்களை வாங்குவோர் புத்தாண்டில் வாங்க விரும்புவர் என்பதால் இந்த முடிவை ஹீரோ மோட்டோகார்ப் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த இம்பல்ஸ் 150 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். ஹீரோ இம்பல்ஸ் 150 விற்பனை 2017-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அந்த வகையில் புதிய இம்பல்ஸ் 200 மாடலின் ஃபிரேம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் எக்ஸ்ட்ரீம் 200 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 முதன்முதலில் EICMA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹீரோ எக்ஸ் பல்ஸ் மாடலில் எக்ஸ்ட்ரீம் 200 சிசி இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 17 என்.எம். டார்கியூ 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஒரு சக்கரத்தில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்போக்டு வீல் கொண்டிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 டியூப் கொண்ட டயர் வழங்கப்படுகிறது. டியூப்-லெஸ் டயர்களை கொண்டு ஆஃப்-ரோடிங் செய்ய முடியாது என்பதால் இவ்வகை டயர்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    தரையில் இருந்து 220 மில்லிமீட்டர் கிரவுன்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், பாதுகாப்பு வழங்கும் வின்ட்-ஷீல்டு மற்றும் நக்கிள் கார்டுகள் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிளாக இருக்கும். இதேபோன்ற வசதிகளை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய விலை ரூ.1.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா முழுக்க விற்பனை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HERO #motorcycle
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியா முழுக்க விற்பனை துவங்குகிறது. புதிய எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை ரூ.89,900 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளின் விநியோகம் அடுத்த வாரம் முதல் துவங்குகிறது.

    புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது.


    முன்பக்கம் சிங்கிள்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 17.0 இன்ச் அலாய் வீல், 100/80 R17 டையர் மற்றும் பின்புறம் 130/17 R17 ரக டையர் வழங்கப்பட்டுள்ளது.

    வடிவமைப்புகளை பொருத்த வரை புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலின் முன்பக்கம் பெரிய ஹெட்லேம்ப், அதன் மேல் இரண்டு எல்.இ.டி. மின்விளக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அனலாக் ரெவ் கவுண்ட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்ட்ரீம் டூயல்-டோன் கிராஃபிக்ஸ் கொண்ட ஃபியூயல் டேன்க், முன்பக்கம் காற்றோட்டமான கௌவுல், ஃபியூயல் டேன்க், தரையில் இருந்து 795 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. மாடலின் இருபுறங்களும் கூர்மையாகவும், பின்புற ஃபென்டர் மெல்லியதாகவும், நீளம் குறைவாகவும் இருக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2018 எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் விலை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் விலை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் வலைத்தளத்தில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை ரூ.88,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கு்ம நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து ஹீரோ தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ரூ.88,000 என அந்நிறுவன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது அதிகாரப்பூர்வ வெளியீட்டின் போது தெரியவரும். இந்தியாவில் ரூ.88,000 விலையில் கிடைக்கும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களின் 200சிசி மாடல்களை விட இது குறைவு ஆகும்.



    இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி RTR 200 4v மற்றும் பஜாஜ் பல்சர் 200NS விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் விலை அடிப்படையில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை மற்ற மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கலாம்.

    புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது.


    முன்பக்கம் சிங்கிள்-சேனல் ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 17.0 இன்ச் அலாய் வீல், 100/80 R17 டையர் மற்றும் பின்புறம் 130/17 R17 ரக டையர் வழங்கப்பட்டுள்ளது.

    வடிவமைப்புகளை பொருத்த வரை புதிய எக்ஸ்ட்ரீம் 200R மாடலின் முன்பக்கம் பெரிய ஹெட்லேம்ப், அதன் மேல் இரண்டு எல்.இ.டி. மின்விளக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அனலாக் ரெவ் கவுண்ட்டர், டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எக்ஸ்ட்ரீம் டூயல்-டோன் கிராஃபிக்ஸ் கொண்ட ஃபியூயல் டேன்க், முன்பக்கம் காற்றோட்டமான கௌவுல், ஃபியூயல் டேன்க், தரையில் இருந்து 795 மில்லிமீட்டர் உயரத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. மாடலின் இருபுறங்களும் கூர்மையாகவும், பின்புற ஃபென்டர் மெல்லியதாகவும், நீளம் குறைவாகவும் இருக்கிறது.
    ஹீரோ நிறுவனத்தின் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2018 மிகப்பெரிய வெளியீடாக எக்ஸ் பல்ஸ் 200 (XPulse 200) ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளில் 200-சிசி 4-ஸ்டிரோக், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் 17 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப் ஆய்வு மையத்தின் பொறியாளர்கள் இந்த இன்ஜினை உருவாக்கியுள்ளனர்.

    5-ஸ்பீடு மேனுவல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் இந்த இன்ஜின் எடை 140 கிலோ என்றும் இதை கொண்டு ஆன் மற்றும் ஆஃப் ரோடிங் பயணங்களை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. முன்புறம் மற்றும் பின்பக்கம் நீண்ட டிராவல் சஸ்பென்ஷன்: 21-இன்ச் டையர், 190 மில்லிமீ்ட்டர் ஃபோர்க்கள், பின்புற டையர் 19 இன்ச் யூனிட் மற்றும் மோனோஷாக் 180 மில்லிமீட்டர் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஒரு சக்கரத்தில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்போக்டு வீல் கொண்டிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 டியூப் கொண்ட டயர் வழங்கப்படுகிறது. டியூப்-லெஸ் டயர்களை கொண்டு ஆஃப்-ரோடிங் செய்ய முடியாது என்பதால் இவ்வகை டயர்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    தரையில் இருந்து 220 மில்லிமீட்டர் கிரவுன்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், பாதுகாப்பு வழங்கும் வின்ட்-ஷீல்டு மற்றும் நக்கிள் கார்டுகள் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிளாக இருக்கும். இதேபோன்ற வசதிகளை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய விலை ரூ.1.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 200 மோட்டார்சைக்கிள் புதிதாய் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    ஆஸ்த்ரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான கேடிஎம் இந்தியாவில் கருப்பு நிறம் கொண்ட ஆர்சி 200 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

    முன்னதாக வெள்ளை நிறத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த சூப்பர்ஸ்போர்ட் ஆர்சி 200 இனி கருப்பு நிறத்திலும் கிடைக்கும். இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிளின் கருப்பு நிறம் போன்றே காட்சியளிக்கிறது. 

    எனினும் இதன் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற மட்டும் வேறுபடுகிறது. கேடிஎம் ஆர்சி 200 பிளாக் நிற எடிஷனின் டெயில் பகுதியில் வெள்ளை நிற கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. புதிய நிறத்தை தவிர கேடிஎம் ஆர்சி 200 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    அந்த வகையில் கேடிஎம் ஆர்சி 200 வழக்கமான 199.5சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 25 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. செயல்திறன் மிக்க இன்ஜினுடன் பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டுள்ளது.

    கேடிஎம் ஆர்சி 200 மாடலின் முன்பக்கம் அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் இந்தியா மாடலில் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படவில்லை.

    இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார், அன்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2017 மாடலில் அகலமான ரியர் வியூ கண்ணாடிகள், மேம்படுத்தப்பட்ட குஷன் இருக்கை கொண்டுள்ளது. கேடிஎம் ஆர்சி 200 கருப்பு நிற எடிஷன் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனையகங்களில் முன்பதிவு செய்ய முடியும்.

    இந்தியாவில் கேடிஎம் ஆர்சி 200 கருப்பு நிற எடிஷன் விலை ரூ.1.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் முன்னணி இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடலை வெளியிட இருக்கிறது. 

    இந்நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இரண்டு புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பிரீமியம் மாடல்களும் Xபல்ஸ் அல்லது எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடல்களை சார்ந்து உருவாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

    அந்த வகையில் இரண்டு பிரீமியம் மாடல்களிலும் தற்சயம் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்றும் Xபல்ஸ் 200 மாடல்களில் வழங்கப்பட்டுள்ள 200சிசி இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 18 பிஹெச்பி பவர், 17 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. 


    கோப்பு படம்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மற்றும் Xபல்ஸ் 200 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இரண்டு மாடல்களிலும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களில் ஒரு மாடல் எக்ஸ்ட்ரீம் 200ஆர் வேரியன்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

    மற்றொரு மாடல் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக ஃபுல்லி ஃபேர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களின் மற்ற விவரங்கள் அறியப்படாத நிலையில், இவை 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×