search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர்"

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்பிலெண்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
    • புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் மாடல் இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் மாடலின் விலை ரூ. 77 ஆயிரத்து 430, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடல் - டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விலை விவரங்கள்:

    ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் டிரம் ரூ. 77 ஆயிரத்து 430

    ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் டிஸ்க் ரூ. 81 ஆயிரத்து 330

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.


    புதிய சூப்பர் ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலில் ஆல் பிளாக் பெயிண்ட், சூப்பர் ஸ்பிலெண்டர் பேட்ஜ், அதிக அளவில் குரோம் எலிமெண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் மாற்றங்கள் பெயிண்ட் அளவில் மட்டும் நிறுத்தப்பட்டு விட்டது. இவை தவிர டிசைன் மற்றும் தோற்றம் அதன் ஸ்டாண்டர்டு மாடலை போன்றே காட்சி அளிக்கிறது.

    ஹீரோ ஸ்பிலெண்டர் கேன்வாஸ் பிளாக் எடிஷன் மாடலில் சிங்கில் பாட் ஹெட்லைட், டிண்ட் செய்யப்பட்ட வைசர், ஒற்றை இருக்கை, அலாய் வீல்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 124.7சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 10.7 ஹெச்.பி. பவர், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், 5 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட பின்புற ஸ்ப்ரிங், 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டிஸ்க் பிரேக் வெர்ஷனில் முன்புறம் 240 மில்லிமீட்டர் ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்புக்காக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ×