search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி"

    • கண்காட்சி வருகிற 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது
    • கண்காட்சி நடைபெற உள்ள இடத்ைத அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.

    கோவை

    கோவை வ.உ.சி மைதானத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

    இந்த பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த புகைபடகண்காட்சி சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் நடைபெற உள்ளது.

    வ.உ.சி மைதானத்தில் வருகிற 7-ந் தேதி இந்த புபைப்பட கண்காட்சி மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது.

    கண்காட்சியானது வரும் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. புகைப்பட காண்காட்சியை திறந்து வைக்கும் சிறப்பு விருந்தினர் இன்னும் முடிவாகவில்லை.

    இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெறுகிறது. இதில் கோவைக்கு முதல்-அமைச்சர் கொடுத்த திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து வரபடுவார்களா? என்ற கேள்விக்கு, யாரையும் கட்டாயபடுத்தி அழைத்து வருவதில்லை. விருப்பத்தின் பெயரால் மட்டுமே கண்காட்சிக்கு வருவார்கள்.

    மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த ப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளிக்காமல் தவிர்த்துவிட்டார்.

    இதில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா, முன்னாள் எம்பி நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×