search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் களப்பணி"

    • வேளாண் தொழிலில் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • விவசாயிகள் மேற்கொள்ளும் பயிர் சாகுபடி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

    குடிமங்கலம் :

    வேளாண் துறையை டிஜிட்டல் மயமாக்கவும், வேளாண் தொழிலில் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.அதனடிப்படையில் வேளாண்மைத்துறை சார்ந்த பல திட்டங்களில் இணைந்துள்ள விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. டிஜிட்டல்மயமாக்கப்பட்ட அவர்களது நில பதிவுகளுடன்வி வசாயிகளின் விவரம் இணைக்கப்படுகிறது.இதன் மூலம், விவசாயிகள் மேற்கொள்ளும் பயிர் சாகுபடி விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள முடியும்.

    அரசின் திட்டங்கள் தடையின்றி கிடைக்கும்.விவசாயிகளின் நிலங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் வேளாண் தோட்டக்கலை துறையில்அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுடன் களப்பணியில் ஈடுபடும் அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    வேளாண்மை, தோட்டக்கலைத்துறையை டிஜிட்டல்மயமாக்குவது வரவேற்கத்தக்கது. அதே நேரம் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், தொழில்நுட்பங்கள், உர பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளுக்கு கற்றுத்தருவது, உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களின் பணியாக உள்ளது.

    கிராமப்புறங்களில் கல்வியறிவு குறைந்த, தொழில்நுட்ப புரிதல் இல்லாத விவசாயிகள் அதிக அளவில் உள்ள நிலையில் அவர்கள்வேளாண், தோட்டக்கலை கள அலுவலர்களின் ஆலோசனைப்படி தான் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கள அலுவலர்கள் டிஜிட்டல் மயமாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதால் தோட்டங்களுக்கு வந்துதொழில்நுட்பஆலோசனைகளை வழங்க அவர்களால் முடிவதில்லை.

    ஏற்கனவே வேளாண், தோட்டக்கலை துறையில் அலுவலர் பற்றாக்குறை உள்ள நிலையில் அன்றாட பணிகள் பாதிக்கின்றன.எனவே விவசாயிகளின் விவரங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணியை மேற்கொள்ள மாற்று பணியாளர்களை அமர்த்தினால் பணி விரைவில் முடியும்.இயல்பான பணிகள் பாதிக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×