search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியுறவுத்துறை தகவல்"

    நிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடையாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. #NiravModi #NiravPassport
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.



    இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியிடம் 6 இந்திய பாஸ்போர்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் 2 பாஸ்போர்ட்டுகள் சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. கடைசியாக இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சமீபத்தில் ஜூன் 12-ம் தேதி பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. லண்டனில் இருந்து யூரோஸ்டார் அதிவேக ரெயில் மூலம் பிரசல்ஸ் நகருக்குச் சென்றபோது பாஸ்போர்ட் விவரங்களை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

    நிரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் பெற்றார் என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நிரவ்  மோடி விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை தனது மவுனத்தை கலைத்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

    அதாவது, நிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் பாஸ்போர்ட் எந்த கட்டத்திலும் இருக்காது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் நிரவ் மோடிக்கு புதிதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்போதும், அவரது முந்தைய பாஸ்போர்ட் தானாக ரத்தாகிவிடும் என்றும் அவர் கூறினார். மேலும் நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு தெரியப்படுத்தி, அவர் இருக்கும் இடத்தை கண்டறிய உதவும்படி கூறியிருப்பதாகவும் ரவீஷ் குமார் தெரிவித்தார். #NiravModi #NiravPassport
    ×