search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாடு செல்ல அனுமதி"

    வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #KartiChidambaram #AbroadTravel
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை நிறுவனங்கள் பதிவு செய்துள்ள இந்த வழக்குகளில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.



    இந்த நிலையில் தான் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் யு.யு.லலித், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    ஆனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது அவ்வளவு முக்கியமில்லை எனக்கூறிய நீதிபதிகள், எனவே ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பின்னரே இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.  #KartiChidambaram #AbroadTravel
    மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என ஜோத்பூர் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. #SalmanKhan #BlackbuckPoachingCase
    ஜெய்ப்பூர்:

    பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்கானி என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார்.

    அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

    இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.

    தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.

    இதனால் அவர் ஜோத்பூர் போலீசாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. பின்னர், சிறையில் இருந்து அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கோர்ட் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என நிபந்தனை விதித்தது.

    இதற்கிடையே, படப்பிடிப்புகளில் பங்கேற்க உள்ளதால் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக்கோரி சல்மான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சல்மான் கான் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது கோர்ட் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். #SalmanKhan #BlackbuckPoachingCase
    சி.பி.ஐ. வழக்கை எதிர்கொண்டுள்ள கார்த்தி சிதம்பரம் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #KartiChidambaram #travelabroad
    புதுடெல்லி:

    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், சொந்த அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.

    மே மாதம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது.

    பயணம் செய்யும் விமானம், இந்தியாவுக்கு திரும்பும் தேதி ஆகியவற்றை விசாரணை முகமையிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கவோ, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை முடிக்கவோ கூடாது. மேலும், வெளிநாடுகளில் சொத்து தொடர்பான எவ்வித பரிவர்த்தனைகளிலும் ஈடுபட கூடாது.

    இந்த பயணத்தை இதர நீதிமன்றங்களில் தடை உத்தரவு மற்றும் ஜாமீன் வாங்க பயன்படுத்த கூடாது. பயணம் முடிந்து தாய்நாடு திரும்பியதும் பாஸ்போர்ட்டை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்தது.



    இந்த நிபந்தனையின்படி வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரம், மீண்டும் ஜூலை 23 (இன்று) முதல் வரும் 31-ம் தேதிவரை தனிப்பட்ட அலுவல் நிமித்தமாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா செல்வதற்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட் முன்னர் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அதே நிபந்தனைகளின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது.  #KartiChidambaram #travelabroad
    ×