search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்பட்டு கூடு"

    • மல்பெரி சாகுபடி செய்து வெண்பட்டு கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
    • அரசு கொள்முதல் மையங்களில் பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    குடிமங்கலம் :

    தமிழகத்தில் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை முன்னிலையில் உள்ளது. இங்கு 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மல்பெரி சாகுபடி செய்து வெண்பட்டு கூடுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.கர்நாடகா மாநிலம், ராம்நகர் தமிழகத்தில், தர்மபுரி, கோவை, சேலம், ஓசூர், உடுமலை மைவாடி ஆகிய அரசு கொள்முதல் மையங்களில் பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    பட்டுநூல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ரீலர்கள், விவசாயிகளிடமிருந்து பட்டுக்கூடுகளை தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கின்றனர்.கடந்த சில நாட்களாக வெண்பட்டு கூடுகளுக்கு தேவை அதிகரித்துள்ளதால் அரசு கொள்முதல் மையங்களில் விலை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உடுமலை மைவாடி மையத்தில் வெண்பட்டு கூடுகளுக்கு கிலோவுக்கு அதிகப்பட்சமாக, 585 ரூபாய், குறைந்தபட்சமாக 488 ரூபாய் விலை கிடைத்தது.சேலம் மையத்தில் அதிகப்பட்சமாக கிலோவுக்கு 601 ரூபாயும், தர்மபுரியில் 652 ரூபாயும் விலை கிடைத்தது.உடுமலை பகுதியில், உற்பத்தியாகும் வெண்பட்டு கூடுகளின், நூலிழை நீளம் கூடுதலாக இருப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ரீலர்கள் உடுமலை பகுதியில் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், வெண்பட்டு கூடுகளுக்கு கிலோ 650 ரூபாய் அளவுக்கு விலை கிடைத்தால் மட்டுமே கட்டுபடியாகும்.கர்நாடகா அரசு வெண்பட்டு கூடு வளர்ப்புக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. தமிழகத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும். பட்டுக்கூடுகளின் தரத்தை மேம்படுத்த பட்டு வளர்ச்சித்துறை சார்பில் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டங்களை வட்டார வாரியாக நடத்த வேண்டும் என்றனர்.   

    ×