search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ்"

    பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 2 கப்
    பெரிய வெங்காயம் - 2
    கேரட் - 2
    பச்சை பட்டாணி - 50 கிராம்
    பீன்ஸ் - 50 கிராம்
    காலிஃப்ளவர் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி, புதினா தழை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 2 கப்
    பட்டை - 1 அங்குலம்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பிரியாணி இலை - சிறிது
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை  :

    அரிசியை கழுவி, 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயத்தை நீளமாக, நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸை சமமான துண்களாக வெட்டிக்கொள்ளவும்.

    காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்கவும்.

    பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை  போனவுடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து லேசாக கிளறவும். நன்றாக வதக்கினால் கலர் மாறிவிடும் எனவே வதக்கவேண்டாம்.

    இதனுடன் அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.

    மூடி போட்டு விசில் போடாமல் அடுப்பை வேகமாக எரிய விடவும். தண்ணீர் கொதித்து வரும் போது லேசாக திறந்து உப்பு போட்டு கலக்கவும்.

    பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    10 நிமிடம் கழித்து மூடியை திறக்கவும்.

    சுவையான வெஜிடபிள் புலாவ் ரெடி.

    சாதம் உடையாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் கொத்தமல்லி, புதினா இலைகளை தூவி அலங்கரிக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×