search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டோ"

    காஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரம் மூலம் அமெரிக்கா அதனை நிராகரித்தது. #GazaStrip
    நியூயார்க்:

    இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. நேற்று, இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீன் செவிலியர் பெண் பலியானததை தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

    இதனை அடுத்து, குவைத் மற்றும் சில வளைகுடா நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. காஸா எல்லை மற்றும் மேற்குக்கரை மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது, அங்கு சர்வதேச பாதுகாப்பு குழுவை ஐ.நா பார்வையில் அமைப்பது ஆகியன அந்த தீர்மானத்தின் சிறப்பு அம்சமாகும்.

    நேற்று, இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா இந்த தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே, ‘இஸ்ரேல் மீது எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்த ஐ.நா உறுப்பு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், ஹமாஸ் மீது குற்றம் சாட்ட யாருக்கும் விருப்பமில்லை’ என கூறினார்.

    சீனா, பிரான்ஸ், ரஷியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க பிரிட்டன் வாக்கெடுப்பை புறக்கணித்தது. பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 
    ×