search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகளில் ஏற்றிய தேசிய கொடி"

    • தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள், கடைகள், வணிகநிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
    • வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை பத்திரமாக எடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கொடிக்கு சேதாரம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்ட நிலையில் வீடுகள்தோறும் கொடியேற்ற மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. அதன்படி தமிழக த்தில் உள்ள பெரும்பாலான வீடுகள், கடைகள், வணிகநிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் அந்த கொடிகள் இன்னும் பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது.

    வழக்கமாக தேசிய கொடி ஏற்றப்பட்டு 3-வது நாளில் அது இறக்கப்பட்டு கொடியை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் இதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வராததால் பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் தேசிய கொடிகள் தலைகீழாக தொங்கும் நிலையிலும் மழை மற்றும் வெயிலில் சேதமடைந்து வரும் நிலையிலும் உள்ளது.

    இந்நிலையில் கொடை க்கானல் நகராட்சி ஆணை யாளர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் சுதந்திரதினவிழாவை முன்னிட்டு வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை பத்திரமாக எடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கொடிக்கு சேதாரம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரி வித்துள்ளார்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு கள் மூலமும் தேசிய கொடியை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×