search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து சாவு"

    • மனவேதனையில் இருந்த கோவிந்தராஜ் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலை சாந்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது62). விவசாயி. இவரது மகன் சீனிவாசன்.

    இந்த நிலையில் கோவிந்தராஜூக்கு மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும், அவருக்கு எந்த பலனும் அளிக்காததால், மனவேதனையில் இருந்த கோவிந்தராஜ் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தராஜ் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அவரது மகன் சீனிவாசன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நிலை சரியாகாததால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமம் ,இலுப்பை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), விவசாயி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 7.30மணி அளவில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார் . இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர்.

    அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜமீன்இளம்பள்ளி அருகே கரட்டுப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). விவசாயி.
    • இவருக்கு கை, கால் மூட்டு வலி இருந்து வந்தது. மூட்டு வலி சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி சரியாகவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜமீன்இளம்பள்ளி அருகே கரட்டுப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). விவசாயி.

    இவருக்கு கை, கால் மூட்டு வலி இருந்து வந்தது. மூட்டு வலி சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி சரியாகவில்லை. இதனால் முருகேசன் விரக்தியில் வீட்டில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதன் காரணமாக வயிறு எரிச்சல் ஏற்படுவே சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், முருகேசனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச் சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசனின் மகன் பூபதி (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி பூச்சி கொல்லி மருந்து குடித்து விட்டார்.
    • சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் பகுதியை சேர்ந்தவர் வேலு சாமி. இவர் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்து விட்டார்.

    இவரது மனைவி முத்து லட்சுமி (வயது 29). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர். முத்துலட்சுமி கணவன் இறந்தது முதல் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி பூச்சி கொல்லி மருந்து (விஷம்) குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட் டம், ஆற்காடு அருகே கீழ்வி ஷாரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இவரது மகன் ரமேஷ் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அடைக்க பத்மாவதி வீட்டில் இருந்த நகையை மகனுக்கு கொடுத்ததாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று பத்மாவதி விஷ தழையை அரைத்து குடித்தார். இதனைய டுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவம னையிலும், பின்னர் அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.
    • மனம் உடைந்து போன கோமாது நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் கோமாது (வயது48). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தும் எந்தவித பலன் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து போன கோமாது நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டதாரியான இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் எருமைக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வேலுமணி.

    பட்டதாரியான இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிசசைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து வேலுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலுமணி தற்கொலை குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்தகராறு காரணமாக செந்தில்குமார் மிகவும் மனவேதனை அடைந்தார்.
    • பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பூதநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது47). டிரைவர். இவர் குடும்பத்தகராறு காரணமாக மிகவும் மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது செந்தில்குமார் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து வந்து செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனமுடைந்த பவித்ரா கடந்த 9-ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து மயக்கமானார்.
    • சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாரண்டஅள்ளி,  

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உலகானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். கூலி தொழிலாளி. இவரின் மகள் பவித்ரா (வயது18) இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வருகிறார்.

    இவரது தாய் கோவிந்தம்மாள் வீட்டு வேலை செய்ய முடியாததால் பவித்ராவை உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் எந்த உதவியும் செய்யாததால் கோபத்தில் பவித்ராவை திட்டியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த பவித்ரா கடந்த 9-ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து மயக்கமானார். இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தம்பி ஹரி உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில் பவித்ராவை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 65), தொழிலாளி. இவர், மதுபோதையில் விஷம் குடித்ததாக தெரிகிறது.

    மயங்கி கிடந்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வினோத் பெயிண்டராக உள்ளார்.
    • வினோத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை, கிருஷ்ணாபுரம் ஏ.டி காலனியை சேர்ந்தவர் வினோத் (வயது36) பெயிண்டர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு திருமணம் முடிந்து 11 ஆன்டுகள் ஆகிறது. இருந்தும் குழந்தை இல்லை. இதையடுத்து வினோத் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமல் மனம் உடைந்து வந்தார். சம்பவத்தன்று வினோத் வாழக்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தந்தை வேலைக்கு செல்ல சொன்னதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மேல் கொடுங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 45) விவசாயி. இவருடைய மகன் கார்த்திக் (18). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மனோகர் கார்த்தியை ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் என்று கண்டித்ததாக தெரிகிறது. பின்னர் கீழ்க்கடுங்காலூர் கிராமத்தில் நடைபெற்ற பாட்டு கச்சேரி நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மனைவி சரளாவுடன் சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் கார்த்திக் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கார்த்திகை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கீழ் கொடுங்கலூர் போலீஸ் நிலையத்தில் மனோகர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×