search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் சங்க தலைவர்"

    பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிக்கு ஆதரவு என்று தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கூறினார்.

    திருவண்ணாமலை:

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடந்தது. மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சந்தியாகு வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

    வருகிற  பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும். கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்து கூறி வாக்கு பெறுவது குறித்தும் பேசப்பட்டது.

    தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரிடம் “குப்பநந்தம் அணையில் இருந்து ஏரையூர் வரை தண்ணீர் வருகிறது. ஊசாம்பாடி ஏரியில் இருந்து கீழ்பென்னாத்தூர் வரை கால்வாய் கட்டி கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கையின் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. 7 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் அ.தி.மு.க. வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் இந்த கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த கால்வாய் கட்டி கொடுக்கப்பட்டால் செங்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை ஆகிய தாலுகாக்களில் பாசன வசதி ஏற்படும். இதனால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது விரக்தி ஏற்பட்டு வருகிற தேர்தலிலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று அவர்களுக்கு வாக்கு அளிக்க உள்ளோம். பூந்தோட்டத்திற்கு அரசு இலவச மின்சார வசதி செய்து தர வேண்டும். உயர் மின்அழுத்த கோபுரம், பசுமை வழிச்சாலை போன்ற விவசாய நிலங்களை அழித்து கொண்டு வரும் திட்டங்களை நாங்கள் கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ஒன்றியத் தலைவர்கள் ஜெயராமன், ராமசாமி, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இடிந்த பகுதிகளை அகற்றிவிட்டு முக்கொம்பில் புதிய அணை கட்டவேண்டும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #mukkombu
    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததால் புள்ளம்பாடி, பெருவளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அணையின் மதகுகள் உடைந்ததால் பாதிப்பில்லை என்று அதிகாரிகள் கூறுவது தவறு.

    லால்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும். 182 ஆண்டுகள் பழமையான அணையை முறையாக பராமரிக்காததே மதகுகள் உடைய காரணமாகும். கொள்ளிடம் பழைய பாலத்தை ஆய்வு செய்து புதிய பாலம் ஏற்கனவே கட்டியிருக்க வேண்டும்.

    வாய்க்கால் சீரமைப்பு, ஆறுகள் இணைப்பு, புதிய தடுப்பணைகள் கட்டுதல், மேலணை கட்டுதல் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசை பல்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால் தமிழக அரசு அதனை பரிசீலித்து கவனிக்காமல் விட்டதே இதுபோன்ற நிகழ்வுக்கு காரணம்.

    ஜெயலலிதாஆட்சிக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்  காலத்தில்  கட்டப்பட்டிருந்த பழைய இரும்பு பாலத்தின் தூர்ந்து போன, பலவீன மடைந்த நிலையை கருத்தில் கொண்டு அதன் அருகிலேயே நேப்பியர் பாலம் வடிவில் புதிய பாலத்தை கட்டினார். அதேபோல் முக்கொம்பு பாலத்தையும் தற்போதைய தமிழக அரசு புதிதாக கட்டியிருக்க வேண்டும். எனவே இனியும் மெத்தன போக்கை காட்டாமல் மேட்டூர் அணையை போன்று சாதக, பாதகங்களை பரிசீலித்து முக்கொம்புவில் புதிய பாலத்தை கட்டவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #mukkombu
    ×