search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய சங்கங்கள்"

    • கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • இன்று காலை முதல் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது மதுரை தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 33 கண்மாய்களும் 110 கிராமங்களில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பினால் தான் விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீரும் உயர்வதுடன் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு ஏற்படும். எனவே, இந்த கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் 58 கிராம பாசன விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு கட்டமாக இன்று உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. 58 கிராம கால்வாய் பாசனத்திட்ட விவசாய சங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் உசிலம்பட்டி விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வர்த்தக சங்கம், நகைக்கடை வியாபாரி சங்கம், ஆட்டோ சங்கம், வியாபாரி சங்கம், பூக்கடை சங்கம், தினசரி மார்க்கெட் சங்கம், 54 தினசரி நவதானியம் பலசரக்கு சிறு வணிக வியாபாரிகள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்தநிலையில் இன்று காலை முதல் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் உசிலம்பட்டி நகர் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. கடையடைப்பு போராட்டத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை ரோடு, பேரையூர் ரோடு, வத்தலகுண்டு சாலை, தேனி சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. உசிலம்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பூ கமிஷன் கடை வியாபாரிகள் மற்றும் பூ வியாபாரிகளும் அனைத்து கடைகளையும் அடைத்திருந்தனர்.

    காலையில் திறந்திருந்த ஒருசில கடைகளும் பின்னர் அடைக்கப்பட்டன. பஜார் பகுதியில் விவசாயிகள் சங்கத்தினர் திரண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    • கூட்டத்திற்கு விவசாய சங்கங்கள் வருத்தம் தெரிவித்தனர்.
    • குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி நாக்குபெட்டா விவசாய சங்கம் மற்றும் மலை மாவட்ட சிறு குறு விவசாய சங்க சார்பில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் ஊட்டியில் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணய குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், மற்றும் தேயிலை வாரியா இயக்குனர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    ஆனால் விவசாய சங்கங்களை அழைக்காமல் இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு விவசாய சங்கங்கள் வருத்தம் தெரிவித்தனர். இது குறித்து மலை மாவட்ட சிறு குழு விவசாய தலைவர் தும்பூர் போஜன் கூறியதாவது:-

    கடந்த 2, 3 மாதங்களாக நாக்குபெட்டா மற்றும் சிறு குறு விவசாய சங்கம் குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி பலக்கட்ட ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

    இவர்கள் விவசாய சங்கங்களை அழைத்துப் பேசாமல் அவர்களாகவே பேசியதில் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எனவே அறிவித்தபடி 14-ந் தேதி குன்னூர் தேயிலை வாரியத்திற்கு முன்பாக அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சித்திரவேல் தலைமை தாங்கினார்.
    • வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டு மனையும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சித்திரவேல் தலைமை தாங்கினார்.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலையும் குறைந்தபட்சம் ரூபாய் 351 சம்பளம் வழங்க கோரியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டு மனையும் வழங்கிட வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×