search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு கருத்தரங்கம்"

    • உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
    • மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    வேலூர்:

    வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சென்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

    பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.செந்தி ல்வேல்முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக டீன் சி. தண்டபாணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.பாபு ஜனார்த்தனம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜே.மாதவன், முன்னாள் பதிவாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ்.விஜய்ஆனந்த் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், காட்பாடி வட்ட ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
    • முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக மனநல தின விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவா் சஞ்சய் பேசியதாவது:-

    ஒருவரின் உடல் மட்டுமல்ல, மனமும் நலமாக இருந்தால்தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும். மனமும், உடலும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றின் பாதிப்பு மற்றொன்றையும் பாதிக்கும்.

    போதைப்பொருள்கள் பயன்படுத்துவது, வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிக்கப்படுகிறது. மக்களிடம் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மனநலக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கவும் உலக மனநல தினம் உருவாக்கப்பட்டது.

    மனநலம் பாதிக்கப்பட்டவா் குறித்த விவரங்கள் தெரியவந்தால் 104 என்ற எண்ணுக்கும், மனச்சோா்வு உள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து 14416 என்ற எண்ணிற்கும் தகவல் தர வேண்டும் என்றாா்.பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, தினேஷ்கண்ணன், சிரஞ்சீவி, சிவசண்முகம் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்களுக்கு ஏதேனும் மனநல பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு உதவுவேன், மனநலம் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவ செயலர் செர்லின் நன்றி கூறினார்.

    • சாலையில் விபத்து நடந்தால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது
    • அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும்

    குளச்சல் :

    தலக்குளம் புதுவிளை பி.எஸ்.மூளை நரம்பியல் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குளச்சல் போக்குவரத்து போலீசார் சார்பில் கல்லூரி கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து குளச்சல் போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் வில்லியம் பென்ஜமின் கலந்துகொண்டு சாலைகளில் விபத்துக்களை எப்படி தடுப்பது, சாலையில் விபத்து நடந்தால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும் என்றும் சாலை ஓரங்களில் வைத்திருக்கும் பதாகைகளில் இருக்கும் வரைபடங்கள், சாலையின் மீது போடப்பட்டிருக்கும்.

    மஞ்சள், வெள்ளை கோடுகள் குறித்தும் காணொலி காட்சி மூலம் விளக்கி பேசினார். இதில் டாக்டர்கள் ஆறுமுகம், சரோஜினி, சுனிதா, ஜூலியா, சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், சிதம்பரதாணு, சுரேஷ்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் அமுது, துணை முதல்வர் ஜோஸ்மின், முருகன், பழனியாண்டி, திலீப் மற்றும் ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பல்வேறு சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் சிறுதானியம் மாவட்டமாக தருமபுரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சத்துகள் நிறைந்த உணவினை சேர்த்துகொள்வதன் மூலம் ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் "இதயத்தை கவனி! வாழ்க்கையை அனுபவி!!" என்ற கருப்பொருளுடன் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் பேசும்போது தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் சாமை, வரகு போன்ற பல்வேறு சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் சிறுதானியம் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடும் வேளாண் பொதுமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் சாமை, வரகு போன்ற சிறு தானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் சிறுதானிய உற்பத்தியில் அதிக விளைச்சலை பெற முடியும்.

    மேலும், பொதுமக்கள் அன்றாடம் தாங்கள் உண்ணும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வதன் மூலம் நல்ல உடல்நலன், ஆரோக்கியமுடன் இருக்கலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ சிறு தானியங்கள் விநியோகம் செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    ஆகையால் நல்ல உடற்பயிற்சியுடன், சத்துகள் நிறைந்த சரிவிகித உணவினை சேர்த்துகொள்வதன் மூலம் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இல்லாத ஆரோக்கிய வாழ்வினை பெற முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். மேலும், உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியத்துடன் வைப்பதற்கான யோகச பயிற்சிகளின் செயல்முறை விளக்கம் பள்ளி மாணவ, மாணவியர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மருந்து மற்றும் மாத்திரைகளை காலை, மதியம், இரவு உள்ளிட்ட குறிப்புகள் அச்சிடப்பட்ட கவரில் வழங்கும் முறையினை மாவட்ட கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார்.

    இக்கருத்தரங்கில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஜெயந்தி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜ்குமார், இருதய நோய் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் கண்ணன், நரம்பியல் துறை பேராசிரியர் வெங்கடேசன், பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகளுக்கு பஸ்களில் செல்லும்போது பாதுகாப்பான பயணம் குறித்தும் விரிவாக பேசினர்.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை பற்றி விளக்கி கூறினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுக்கா க்களில் உள்ள பள்ளி பேருந்து ஓட்டுனர்கள், மற்றும் உதவியாளர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கம், ஓசூரில் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்றார்.

    இதில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், தேன்கனி க்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜய லட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தனியார் பள்ளி முதல்வர் ஷைலா, துணை முதல்வர் ஸ்ரீ தனா ஆகியோர் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கியும், மாணவர்களை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து செல்லுதல், அழைத்து வருதல் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு பஸ்களில் செல்லும்போது பாதுகாப்பான பயணம் குறித்தும் விரிவாக பேசினர்.

    முன்னதாக, நாமக்கல் அசோக் லேலண்ட் ஓட்டுனர் பயிற்சி மையத்தின் முன்னாள் மேலாளர் சுரேந்திரன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை பற்றி விளக்கி கூறினார்.

    இதில், 1,000 -க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    • கூட்டமைப்பின் இணை இயக்குநர் (பொது) உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்ட மைப்பின் சார்பில், ஓசூரை ஏற்றுமதி மையமாக மேம்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டுத் திட்ட கருத்தரங்கம், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    ஏற்றுமதியில் பெருகி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக ஏற்றுமதியா ளர்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும், மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக மேம்படுத்தவும், சர்வதேச சந்தையில் கிடைக்கும் பல்வேறு வர்த்தக வாய்ப்புகள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது மற்றும் கீழ் கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பலன்கள், ஏற்றுமதிகளை நிர்வகிக்கும் நடைமுறைகள் போன்றவற்றைப் பற்றி தொழில்முனைவோர் புரிந்து கொள்ளவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த கருத்தரங்கிற்கு, இந்திய ஏற்றுமதி நிறுவ னங்களின் கூட்டமைப்பின் இணை இயக்குநர் (பொது) உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் ராமமூர்த்தி, கலால் துறையின் ஜி.எஸ்டி.பிரிவு அதிகாரி பூபதி, எச்.டி.எப்.சி. வங்கி அதிகாரி அனுராக்,பாக்கியவேலு, ஓசூர் ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன், கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பேசினார்கள்.

    இந்த கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    • பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் மற்றும் குற்றங்களுக்கான தண்டனைகளை தெரிவிக்கப்பட்டது.
    • இவ்விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் கண்ணுச்சாமி நன்றி கூறினார்.

    பென்னாகரம்,

    உலக சட்ட நீதி நாளை முன்னிட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம் பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் செல்வவிநாயகம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.

    இதில் வக்கீல் தேவேந்திரன், பென்னாகரம் இலவச சட்ட உதவி மையம் சார்பில் சிவக்குமார் மற்றும் மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் மற்றும் குற்றங்களுக்கான தண்டனைகளை மாணவர்களிடையே தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இவ்விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் கண்ணுச்சாமி நன்றி கூறினார்.

    • தருமபுரி மாவட்ட சைபர் பிரிவு காவல்துறை ஆய்வாளர் சரண்யா இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.
    • முடிவில் நேரு யுவகேந்திரா சார்ந்த ஹரி பிரசாந்த் நன்றியுரை வழங்கினார்.

    தருமபுரி,

    மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சகம் தருமபுரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பாக தருமபுரி மாவட்ட அரசு சட்ட கல்லூரியில் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் கல்லூரி முதல்வர் சிவதாஸ் வரவேற்புரை ஆற்றினார். நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் நோக்கவுரை வழங்கினார்.தருமபுரி மாவட்ட சைபர் பிரிவு காவல்துறை ஆய்வாளர் சரண்யா இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்.

    இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியை ரேகா மற்றும் மாணவ, மாணவிகள் துறை பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் நேரு யுவகேந்திரா சார்ந்த ஹரி பிரசாந்த் நன்றியுரை வழங்கினார்.

    ×