search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலையில்"

    • வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    விவசாயத்தில் வேலையாட்களுக்கான பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி உழுவை எந்திரம் ரோட்டாவேட்டர், பவர்டில்லர், களைஎடுக்கும் கருவி, பல்வகை கதிர் பயிர் அடிக்கும் எந்திரம், நெல் அறுவடை எந்திரம் மற்றும் இதர எந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் அனைத்து விவசாயிகள் விண்ணப்பம் மற்றும் வருவாய் ஆவணங்களை எங்களது சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரி உபகோட்டங்களில் சமர்ப்பித்து மூதுரிமை அடிப்படையில் பெற்றுக்–கொள்ள கேட்டுக்–கொள்ளப்ப–டுகிறது. இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட ஏதுவாக முதற்கட்டமாக ரூ.1.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி–ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான எந்திரங்கள் வாங்க முன்னுரிமை வழங்கப்படும். இதில் சிறு, குறு மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவிகித மானியமும் அல்லது அரசு நிர்ணயிக்கும் தொகை உள்ளிட்டவற்றில் எது குறைவோ அதனை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்ப–டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறு / குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியமும் கணக்கிட்டு தனியே வழங்கப்படும்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் _லம் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் வேளாண் அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.
    • விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் வேளாண்மை உதவி அலுவலர் கோவிந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உணவில் உப்பின் பயன்பாட்டை போன்றே நுண்ணூட்ட உரங்கள் தேவை. அதை சிறிதளவில் இட்டாலும் இதன் தேவை இன்றியமையாதது. பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.

    இரும்புச்சத்து பயிரின் பச்சை தன்மையை சீராக வைக்க உதவுகிறது. இதன் குறைப்பாட்டால் பயிர்கள் வெளிறி மஞ்சள் நிறம் அல்லது வெண்மை நிறத்துடன் காணப்படும். துத்தநாகச்சத்து கணு இடைப்பகுதி வளர்ச்சி, புரதங்களின் சேர்க்கையில் பங்காற்றி மொத்த மகசூலில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகிறது. இந்த சத்து குறைப்பாட்டால் பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாகி மகசூல் பாதிக்கும். போரான் சத்து குறைப்பாட்டால் பூ உதிர்தல், காய், கனிகளின் அளவு சிறுத்து, ஒல்லியாகவும் ஒழுங்கற்ற அமைப்புடன் காணப்படும்.தாமிர சத்து பயிரின் இனப்பெருக்கத்தினை அதிகரித்து, அதிக மகசூல் பெற உதவுகின்றது. இந்த சத்து குறைப்பாட்டினால் பயிரில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. மாங்கனீசு சத்து பச்சையம் உருவாதல், ஒளிர்சேர்க்கை, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.

    இதன் குறைபாட்டால் இலை நரம்பிடை பகுதிகள் வெளிறி காணப்படும். பயிர்களில் எளிதில் நோய் ஏற்படும். இவ்வாறு பல்வேறு முக்கிய பணி களை செய்யும் இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவதன் மூலம் நமது பயிரின் மொத்த மகசூலில் 15-20 சதவீம் கூடுதலாக பெறலாம். குறைந்த அளவே தேவைப்படும் இந்த நுண்ணூட்ட உரங்கள் ஒவ்வொரு பயிருக்கும் தேவைப்படும் அளவு மாறும்.வேளாண்மை துறை நுண்ணூட்ட சத்து கலவை களாக, சிறு தானிய பயிர்களுக்கான கலவை, எண்ணை வித்து கலவை, தென்னை நுண்ணூட்ட கலவை என ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு சத்துக்களை தேவையான விகிதத்தில் கலந்து விவசாயிகள் வழங்கி வருகிறது. இதை பயிருக்கு ஏற்ப இடுவதற்கு எளிதாக ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ நுண்ணூட்ட கலவை பொட்டலங்களாக விநியோகம் செய்து வருகிறது.

    விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது. நடப்பு பருவத்தில் பரமத்தி வட்டார விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற ஜி.எஸ்.டி நீங்கலாக 50 சதவீத மானிய விலையில் நுண்ணூட்ட உரங்களை பெற்று பயிருக்கு இடலாம். விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் எண்ணுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

    • கபிலர்மலை வட்டாரத்தில் 3 கிராமங்களுக்கு தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கப்பட்டது.
    • ஒரு குடும்பத்திற்கு 3 கன்றுகள் மட்டும் வழங்கப்படும்.

    பரமத்திவேலூர்:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் திட்டத்தின் கீழ் கபிலர்மலை வட்டாரம் பிலிக்கல்பாளையம், இருக்கூர், அ.குன்னத்தூர் ஆகிய 3 கிராமங்களுக்கு தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    ஒரு குடும்பத்திற்கு 3 கன்றுகள் மட்டும் வழங்கப்படும். தென்னங் கன்றுகள் பெற தேவையான ஆவணங்கள் சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்யுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை நலத்துறை இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
    • ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.

    வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    ×