search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை விறுவிறுப்பு"

    • திங்கட்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
    • கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    கடலூர்:

    பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. மாட்டுப்பொங்கல் இந்த நாளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை நன்றாக குளிப்பாட்டி, அவைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு மற்றும் அலங்கார பொருட்கள் அணிவித்து அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பி

    ன்னர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கால்நடை களை ஊர்வலமாக கொண்டு செல்வார்கள். இதைத்தொடர்ந்து கால்நடைகளுக்கு பொங்கல், பழங்கள் வழங்குவது வழக்கம். மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்து மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள்.


    இந்த விழாவையொட்டி பண்ருட்டி கடைவீதியில் கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் மூக்கணாங்கயிறு, சலங்கை மணி, பெல்ட், அலங்கார கயிறுகள், பலூன்கள், கால்நடைகளை கட்டி இழுப்பதற்கான புதிய கயிறுகள், கொம்புகளுக்கு தீட்டப்படும் வண்ணங்கள், கலர் பவுடர்கள், பலூன்கள் ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் மற்றும் வீடுகளில் கால்நடைகளை வளர்க்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான விதவிதமான அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    • கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

    ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ×