search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவு ரெயில்கள்"

    • சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் நின்று சென்ற சுமார் 13 ரயில்கள் கடந்த 2 ஆண்டுகளாக நின்று செல்வதில்லை.
    • பயணிகள் ரெயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட தீர்வு காணப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தனித்தனியாக ரெயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிபேச்சுவா ர்த்தையில் உறுதியளிக்க ப்பட்டதால் தற்காலிகமா நிறுத்திவை க்கப்பட்டுள்ளது.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் நின்று சென்ற விரைவு ரெயில்கள் உள்ளிட்ட சுமார் 13 ரயில்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நின்று செல்வதில்லை. இதனால் சீர்காழி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ}மாணவிகள் என அனைத்துதரப்பினரும் அவதியடைந்து வருகி ன்றனர்.

    இதனிடையே சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி ரெயில் பயணிகள் நல சங்கம் ஆகியன சார்பில் 29ம் தேதி சீர்காழி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஜூலை 9-ம் தேதி சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதனிடையே சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில், ரெயி ல்வேதுறை அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனி யாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் பாபு.கே.விஜயன் மற்றும் சங்க நிர்வாகிகள், ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் பங்கேற்றனர்.

    அதில் தற்போது பயணிகள் ரெயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திடவும் மூன்று மாத கால அவகாசம் கேட்டு கொண்டு தீர்வு காணப்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் மற்றும் நகர வர்த்தக சங்கம், வர்த்தக பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர் செந்தில்குமார், ரயில்வே துறையை சேர்ந்த சங்கர்குரு ஆகியோர் பங்கேற்று ஜூலை 7ம் தேதிக்குள் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின்பேரில் ஜூலை9ம் தேதி நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டமும் கைவிடப்பட்டது.

    ×