search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிக்கு கொலை மிரட்டல்"

    ரூ.27 லட்சம் மோசடி குறித்து போலீசில் புகார் கூறிய வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேசுவரன் (வயது 37) ரெடிமேட் ஆடை வியாபாரி.

    இவரிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜரத்தினம் (45) பழகி வந்தார். அப்போது கத்தார் நாட்டிற்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யலாம் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து இருவரிடையே கடந்த நவம்பர் மாதம் ஏற்றுமதி தொழில் வியாபார ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின்னர் பல தவணைகளில் ரூ.31 லட்சத்து 27 ஆயிரத்தை மகேசுவரன் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட ராஜரத்தினம், ஏற்றுமதி தொழிலை தொடங்காமல் காலம் கடத்தி உள்ளார். இதனால் மகேசுவரன் பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.27 லட்சத்து 32 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் மகேசுவரன் புகார் செய்தார்.

    இதனால் ராஜரத்தினம் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று மகேசுவரன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு ராஜரத்தினம், அவரது தந்தை கருமலை, தாயார் கல்யாணி, சகோதரர் கண்ணன் உள்பட 7 பேர் காரில் வந்து வழிமறித்தனர். அவர்கள் போலீசில் எப்படி புகார் கொடுக்கலாம் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக, ராஜபாளையம் போலீசில் மகேசுவரன் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ராஜரத்தினம் கைது செய்யப்பட்டார்.

    சொக்கநாதன்பேட்டையில் மாமூல்தர மறுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு சொக்கநாதன்பேட்டை தட்சிணாமூர்த்தி நகர் மெயின்ரோட்டில் மளிகைகடை நடத்தி வருபவர் கேசவன் (வயது 35). சம்பவத்தன்று இரவு இவர் மளிகை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கேசவனிடம் மாமூல் பணம் கேட்டனர். ஆனால் கேசவன் மாமூல் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமூல் பணம் தராவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

    இதையடுத்து கேசவன் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கேசவனை கத்தியை காட்டி மிரட்டியது சண்முகாபுரம் அணைக்கரை வீதியை சேர்ந்த தமிழ்மணி (24) மற்றும் ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த மூர்த்தி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    ×