search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான உதிரி பாகம்"

    இந்திய விமானப்படையில் உள்ள ஏ.என் 32 ரக விமான உதிரி பாகங்கள் வாங்க உக்ரைனில் உள்ள நிறுவனதுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதை அந்நாட்டு அரசு கண்டுபிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் போக்குவரத்து பிரிவில் பயன்படுத்தக்கூடிய ஏ.என்-32 ரக விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வாங்குவது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறைக்கும், உக்ரைன் நாட்டை சேர்ந்த நிறுவனத்துக்கும் இடையே 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

    உதிரி பாகங்கள் வினியோகம் செய்வது தொடர்பாக குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் நடந்து 11 மாதங்களுக்கு பிறகு இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்புக்கு தெரியவந்தது. இதில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் ரூ.17.55 கோடி லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தொடர்பு, பணம் பரிமாற்றம் நடந்ததாக சந்தேகப்படும் துபாயில் உள்ள நூர் இஸ்லாமிக் வங்கி ஆகியவற்றிடம் விசாரணை நடத்த உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவும்படி இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு, உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு கடிதம் எழுதி உள்ளது தற்போது அம்பலமாகி இருக்கிறது.

    ×