search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை"

    • மாநகர-மாவட்ட அளவில் 2500 போலீசாரை பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்த முடிவு
    • கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதியும், மாநகர பகுதியில் 22-ந்தேதியும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி (விஜர்சனம்) நடக்க உள்ளது

    கோவை,

    நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாநகரம்-மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடு களில் இந்து முன்னணி, விசுவஇந்துபரிஷத், பாரத் சேனா, சிவசேனா, அனுமன்சேனா, சக்திசேனா, விவேகானந்தர் பேரவை, இந்து மகாசபா, இந்துஸ்தான் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர பொதுமக்கள், பொதுநலஅமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை கள் வைக்கப்பட உள்ளன.

    கோவையில் விநாயகர் சிலைகளை வைக்கும் முன்பாக உரிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் என்று ஏற்கெனவே அறிவு றுத்தப்பட்டு இருந்தது. இதற்காக பல்வேறு அமைப்பு களும் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக விண்ணப்பித்து உள்ளன.

    அதன்படி கோவை மாநகரில் 680, புறநகரில் 1611 விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்து உள்ளன. இதுதவிர பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான முயற்சிகளில் உள்ளனர். எனவே கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்த 2500 விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என்பது தெரிய வந்து உள்ளது.

    கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 11 அடிஉயர ராஜவிநாயகர் சிலை மற்றும் தெப்பக்குளம் மைதானத்தில் பிரமாண்ட வெற்றி விநாயகர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிறப்பு வழிபாடு-பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் இந்து அமைப்புகள் முடிவு செய்து உள்ளன.

    கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந்தேதியும், மாநகர பகுதியில் 22-ந்தேதியும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி (விஜர்சனம்) நடக்க உள்ளது.

    இதன்ஒரு பகுதியாக கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் நடக்க உள்ள ராஜவிநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பங்கேற்கிறார். காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    தெப்பக்குளம் மைதானத்தில் வெற்றி விநாயகர் விஜர்சன ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார். மத்திய இணைமந்திரி முருகன் பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    ேகாவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகரம்- மாவட்ட அளவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 2500 போலீசார் பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  

    • 2 நாட்கள் ஊர்வலத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி,

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு வண்ணங்களில் களிம ண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடு கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    விழா நிறைவ டைந்தவுடன் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலை களில் கரை க்கப்படுகிறது. நீலகி ரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில், பொது இடங்க ளில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 601 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

    விழாவையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து பூசாரிகள் பேரவைகள் சார்பில் வருகிற 3-ந் தேதியும், மாவட்டம் முழுவதும் இந்து அமை ப்புகள் சார்பில் 4-ந் தேதியும் விநாயகர் சிலை ஊர்வ லங்கள் நடக்கின்றன.

    ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் வழியாக செல்லும் போது அதிக கோஷம் எழுப்பக்கூடாது, வணிக நிறுவனங்களை மூட சொல்லக்கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, எந்தவித சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபட க்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். ஊட்டி நகரிலேயே பெரிய விநாயகர் சிலை ஊட்டி பாம்பே கேசியல் பகுதியில் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

    • 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
    • விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கோவை: 

    நாடு முழுவதும் நாளை (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

     

    இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ேகாவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     

    இதுதவிர போலீசார் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதி, மேன்ஷன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தங்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து வருகின்றனர். சந்தேகப்படும் நபா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     

    மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக, எந்த பிரச்சினையும் ஏற்படாத விதமாக கொண்டாட வேண்டும் என போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத் அமைப்பு மற்றும் இந்து அமைப்பினரிடம் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து ேகாவை மாவட்டம் முழுவதும் 2108 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்காக புறநகரில் 1600 போலீசாரும் மாநகரில் 2000 போலீசாரும் என மொத்தம் 3600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை முதல் 5-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா மிக அமைதியாக நடத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் கேட்டுகொண்டனர். 

    ×