search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைத்தார்"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதியில் பாலப் பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப் பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரம் வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரம் வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு ஏலம் போனது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • தொடர் மழையின் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும் விலை போனது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன் வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளை பயிரிட்டுள்ளனர்.நன்கு விளைந்த வாழைத் தார்களை வெட்டி, உள்ளூர் பகுதி வியாபாரிகள், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்ச நாடன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550-க்கும் விற்பனை ஆனது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.600-க்கும் விற்பனை ஆனது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழையின் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதியில் வாழைத்தார் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது.
    • கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்க லம், பொத்தனூர், பரமத்திவேலூர், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மோகனூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, கரூர் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் வாழைத்தார்களை வியாபாரிகள் வாழைத் தோப்பில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சிறு விவசாயிகள் விளைவிக்கும் வாழைத்தார்களை விற்பனை செய்ய பரமத்திவேலூரில் தினசரி வாழைத்தார் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஆயுத பூஜைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் இன்று வாழை தாருக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் வாழைத்தார்களை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூவாயிரத்துக்கும் அதிகமான வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் வெளியூர் வியாபாரிகள் அதிகம் வராததால் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை.

    கடந்த வாரம் ரூ. 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையான பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. கடந்த வாரத்தில் ரூ.400 ரூபாய்க்கு விற்பனையான பச்சை நாடன் தற்போது ரூ. 300 முதல் ரூ.350- க்கு விற்பனையானது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ரஸ்தாலி, கற்பூரவள்ளி ரக வாலைத்தார்கள் இன்று விலை அதிகரித்து ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி அடைந்தது. ஆயுத பூஜையை ஒட்டி வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு வாழைத்தார் விலை வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி.
    • கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத் தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பால ப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன், வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    அதேபோல் வியா பாரிகள் வாழைத் தோப்பு களிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் தார் ஒன்று ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.400க்கும் வாங்கிச் சென்றனர்.

    திருமண முகூர்த்தங்கள், கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித் தனர்.

    • கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஆடி அமாவாசையை முன்னிட்டு‌ நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயி கள் கொண்டு வந்திருந்தனர்.Bananas, price, rise, வாழைத்தார், விலை, உயர்வு,

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டிமற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு‌ நடைபெற்ற ஏலத்திற்கு 1500 வாழைத்தார்களை விவசாயி கள் கொண்டு வந்திருந்தனர்.வாழைத்தார்கள்விலை உயர்வ டைந்துள்ள தால்வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பயிர்களுக்கிடையில் ஊடுபயிராக வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
    • ஒரு பூவன் பழம் ரூ. 8 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை பகுதியில் ஆண்டுப் பயிரான வாழை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட போதும் அறுவடை சமயத்தில் போதிய விலை கிடைக்காமல் தவிக்கும் நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது வாழைப்பழத்துக்கு நல்ல விலை கிடைத்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    உடுமலை பகுதியில் தனிப்பயிராகவோ, தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கிடையில் ஊடுபயிராகவோ வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. திட்டமிட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு சீரான இடைவெளியில் அறுவடை செய்வதன் மூலம் விலை குறைவால் ஏற்படும் பாதிப்புகளை ஒருசில விவசாயிகள் தவிர்க்கின்றனர்.

    நமது பகுதியைப் பொறுத்தவரை பூவன், ரஸ்தாளி, தேன் கதலி, கற்பூரவள்ளி போன்ற ரகங்கள் அதிக பயன்பாட்டில் உள்ளது. இதுதவிர செவ்வாழை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஆடி மாதத்தில் தான் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாத வாழை மரங்கள் பலத்த காற்றினால் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால் சந்தைக்கு வாழைத்தார்களின் வரத்து குறைவாகவே உள்ளது. அத்துடன் ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் போன்றவை நடைபெறுவதால் வாழைப்பழங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆனாலும் சில்லறை விலையோடு ஒப்பிடும்போது விவசாயிகளிடம் மிகக்குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது சில்லறை விற்பனையில் ஒரு பூவன் பழம் ரூ. 8 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தொப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.
    • நாளை அமாவாசை என்பதால் வாலைத்தார்களின் வரத்து குறைந்தால், விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம் வெங்கரை, கள்ளிப்பாளையம், பொத்தனூர் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் வாழைத்தார் பயிரிடப்பட்டுள்ளது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தொப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.

    மேலும் இங்கு உற்பத்தி செய்யும் வாழைத்தார்களின் ஒரு பகுதியை விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெற்று வரும் தினசரி வாழைத்தார் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை அமாவாசை என்பதால் வாலைத்தார்களின் வரத்து குறைந்தால், விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது வழைத்தார்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் தார்களின் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர் வாழைத்தார் மார்கெட்டில், பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.700 முதல் 1100 ரூபாய் வரையிலும், ரஸ்தாலி ரூ.600 முதல் 900 வரையிலும், கற்பூரவள்ளி ரூ. 550 முதல் 700 வரையிலும், ஏலரிசி வாழை ரு.250 முதல் 300 வரையிலும், பச்சை நாடன் ரு.400 முதல் 600 வரையிலும் மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ 10 வரையிலும் செவ்வாழைப்பழம் ஒன்று ரூ.12-க்கு விற்பனையானது. அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரத்தை விட தார் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை விலை ஏற்றத்தால் வாழை பயிரிட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூரில் வாழைத்தார் விலை மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

    கடலூர்:

    கடலூர் அருகே ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை , சாத்தான்குப்பம், கீரப்பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளையம் உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக்கான ரூபாய்கள் பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப்பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறுவடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லாமல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


    இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 700 ரூபாய்க்கும், பூவன்பழம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் 500 ரூபாய்க்கும், ஏலக்கி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் 300 ரூபாய்க்கும், ரஸ்தாலி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விலை அனைத்தும் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் வாழைப்பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலையில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    பரமத்தி வேலூர் பகுதிகளில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும் மொந்தன் காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும் , மொந்தன் காய் ஒன்று ரூ.6- க்கும் விற்பனையானது.

    வாழைத்தார்கள் வரத்து குறைந்ததால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×