search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வால்வோ XC40 EV"

    வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த முழு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.




    வால்வோ நிறுவனத்தின் புதிய தலைமுறை எஸ்60 செடான் மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் வால்வோ நிறுவன தலைவை வடிவமைப்பாளர் தாமஸ் இன்கென்லத் வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் XC40 என தெரிவித்தார்.
    மேலும் அடுத்த தலைமுறை XC90 மாடல் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    போல்ஸ்டாரின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியான பின் வால்வோ XC40 EV (எலெக்ட்ரிக் மாடல்) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 EV மற்றும் XC90 என இரண்டு எஸ்.யு.வி. மாடல்களும் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது.

    வால்வோ XC40 EV தயாரிப்பு பணிகள் 2021-ம் ஆண்டு துவங்கும் என்றும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2025-ம் ஆண்டுவாக்கில் 50% விற்பனை எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து கிடைக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.



    2019-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வால்வோ கார் மாடலிலும் எலெக்ட்ரிக் வேரியன்ட் மைல்டு ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் அல்லது பேட்டரி-எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எதிர்கால வால்வோ மாடல்களில் டீசல் ஆப்ஷன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

    முற்றிலும் புதிய மாடல்களை உருவாக்குவதற்கு பதில் வால்வோ ஏற்கனவே விற்பனை செய்யும் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தொடர்ந்து அறிமுகம் செய்யும் என தாமஸ் தெரிவித்திருக்கிறார். 2025-ம் ஆண்டு முதல் வால்வோ தயாரிக்கும் கார்களில் குறைந்தபட்சம் 25% மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
    ×