search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாங்"

    ஐபோன் வாங்க ஆசைப்பட்டு ஒரு கிட்னியை விற்ற இளைஞர், தற்சமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். #IPhone
    சீனாவில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வாங் என்ற இளைஞர் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு, அதை வாங்க வழியில்லாமல் சோகத்தில் இருந்து வந்தார்.

    ஐபோன் மீது கொண்ட மோகத்தாலும், நண்பர்களின் பேச்சைக்கேட்டும் 2011 ஆம் ஆண்டு தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முன் வந்தார். தனது ஒரு சிறுநீரகத்தை 3,200 அமெரிக்க டாலர்களுக்கு விற்றார். கிடைத்த பணத்தில் தனது கனவு பொருளான புதிய ஐபோனையும் வாங்கினார்.


    உடலில் ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில், நாளடைவில் வாங்கின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    அப்போதுதான் அவருக்கு அறுவை சிகிச்சை சுகாதாரமான முறையில் செய்யப்படாததும், இதனால் தொற்று ஏற்பட்டதால் அவரின் மற்றொரு சிறுநீரகம் பாதிப்பட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாக வாங் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வாங்கின் பெற்றோர் அவரது உயிரை காப்பாற்ற டயாலிசிஸ் மற்றும் பிற சிகிச்சைகளுக்கான செலவுக்கு தேவையான பணம் திரட்ட முடியாமல் பொருளாதார ரீதியிலும், மனரீதியிலும் தற்போது பரிதவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பான செய்தி சமீப காலமாக சீன ஊடகங்களில் வெளியாக தொடங்கியதும் இதுபோல் உடலுறுப்பு தானம் மூலம் தங்களது தேவைகளை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பலர் பதற்றம் அடைந்துள்ளனர். #IPhone
    ×