search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் 4 பேர் கைது"

    • கல்லூரி மாணவியிடம் 4 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • வழி கேட்பது போல் நடித்து பறித்து சென்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள க.எறையூர் கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் ஜெயா (வயது 19). இவர் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து தனது வயல் காட்டுக்கு நெடுவாசல் பாதையில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது, 2 மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்திருந்த நபர் கீழே இறங்கி வந்து ஜெயாவிடம் இந்த பாதை எந்த ஊருக்கு செல்கிறது என விசாரித்து அவரது கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி நெடுவாசல் கிராமம் வழியாக இருவரும் தப்பி சென்றனர்.

    இதில் ஜெயாவின் பின் கழுத்து பகுதி மற்றும் இடது உள்ளங்கையில் சீராய்ப்பு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெயாவின் தந்தை வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."

    • ஜெயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து ரொக்கம் ரூபாய் 2320 பறிமுதல் செய்யப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், சந்திரமோகன், ராஜேந்திரன், செல்வராஜ் என்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 108 சீட்டுக்களையும், ரொக்கம் ரூபாய் 2320 பறிமுதல் செய்து 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அக்னி-4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் நான்காவது ஆகும்.
    • அக்னி-4 ஏவுகணையின் வெற்றி, இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    புவனேஷ்வர்:

    இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

    ஒரு டன் அணு ஆயுதங்களை ஏந்திச்சென்று 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கவல்லது அக்னி-4 ஏவுகணை.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    நாமக்கல்லில் பொது சொத்துகளை சேதப்படுத்த திட்டமிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சேந்தமங்கலம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்காயி அம்மன் கோவில் போகும் வழியில் சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்து இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் பொம்மம்பட்டி அல்லாளபுரத்தை சேர்ந்த தமிழரசன் (வயது 22), பூபதிராஜன் (22), எம்.மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த சந்தோஷ்குமார் (22) மற்றும் பிரதீபன் (30) என்பது தெரியவந்தது. 

    அவர்கள் அரசு மதுபான கடையை சேதப்படுத்தவும், அரசு பஸ் கண்ணாடியை உடைக்க திட்டம் போட்டு இருப்பதும், மேலும் ரவுடிசம் செய்து, பணம் சம்பாதிக்க திட்டம் போட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் பொது சொத்துக்களை சேதப்படுத்த திட்டமிட்டதாக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டுகாட்டி நிறுவனத்தின் புதிய பணிகல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டுகாட்டி நிறுவனம் பணிகேல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பணிகேல் வி4 எஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். இந்தியாவில் டுகாட்டி பணிகேல் வி4எஸ் விலை ரூ. 28.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ஒட்டுமொத்த தோற்றத்தில் பணிகேல் வி4எஸ்.பி. மாடல் பணிகேல் வி4எஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய வி4 எஸ்.பி. மாடலில் விண்டர் டெஸ்ட் லிவெரி கொண்டிருக்கிறது. பணிகேல் வி4 எஸ்.பி. மாடலில் மார்ஷெஸ்னி போர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள் மற்றும் பைரெளி டையப்ளோ சூப்பர்கோசா எஸ்.பி. டையர்கள் வழங்கப்படுகிறது.

     டுகாட்டி பணிகல் வி4 எஸ்.பி.

    புதிய டுகாட்டி பணிகேல் வி4 எஸ்.பி. மாடலிலும் 1103சிசி, டெஸ்மோடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 214 பி.ஹெச்.பி. திறன், 124 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஓலின்ஸ் மற்றும் பிரெம்போ சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எஸ்.பி. மாடலில் குவிக்‌ஷிப்டர், ரைடிங் மற்றும் பவர் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் போன்ற எலெக்ட்ரிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தற்போது இசட் 4 ரோட்ஸ்டர் எனும் சொகுசு கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    சொகுசு கார்களை தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தற்போது இசட் 4 ரோட்ஸ்டர் எனும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 2 வகையான என்ஜினைக் கொண்ட இரு மாடல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது பி.எம்.டபுள்யூ. இசட் 4. எஸ். டிரைவ் 2.ஓ.ஐ. (விலை ரூ.64,90,000) எனும் ஒரு மாடலும் பி.எம்.டபுள்யூ. இசட்4 எம்4 ஓ.ஐ. (ரூ.78,90,000) எனும் மற்றொரு மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    ஸ்போர்ட் மாடல் காராக வெளியாகி இருக்கும் இந்தக் காரின் மேற்கூரை திறந்து மூடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பட்டனை அழுத்தினால் 10 வினாடிகளில் இது மூடிக்கொள்ளும். இதன் இருக்கையை கூட சவுகரியத்திற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். அதுவும் பட்டனை அழுத்தினாலே போதுமானது. இதுவும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இருவர் பயணிக்கும் வகையில் மேற்கூரை தேவைக்கேற்ப திறந்து மூடும் வகையில் (கன்வெர்டிபிள் மாடல்) இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முன்பகுதி, பக்கவாட்டுப் பகுதிகளில் ஏர் பேக் விரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.எஸ். வசதி உள்ளது. இதனால் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.



    7 சீரிஸ் பிளக் அன்ட் ஹைபிரிட்: பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடலில் பிளக் இன் ஹைபிரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையில் 745 எல்.இ. பிளக்-இன் ஹைபிரிட் என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன.

    இது முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்டு முழு காராக இறக்குமதி செய்யப்படுகிறது. பின் சக்கரங்களுக்கான ஸ்டீரிங் வசதி அல்லது பி.எம்.டபுள்யூ.வின் விசேஷ வடிவமைப்பான இன்டக்ரெல் ஆக்டிவ் ஸ்டீரிங் வசதியோடு வந்துள்ளது. இது 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. 

    இந்த என்ஜின் 286 ஹெச்.பி. திறனும் 450 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டது. பின் இருக்கையின் அடிப்பகுதியில் 12 கிலோவாட் பேட்டரி உள்ளது. எலெக்ட்ரிக் மோட் வசதியை தேர்வு செய்தால் மட்டுமே பேட்டரியிலிருந்து கார் இயக்கத்துக்கான மின்சாரம் கிடைக்கும். 

    இந்த பேட்டரி 55 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 110 கி.மீ. வேகம் வரை செல்ல முடியும். இதில் மிகச் சிறப்பான ஆடியோ சிஸ்டம் உள்ளது. பிரீமியம் மாடலாக அறிமுகமாக உள்ள இந்த காரின் விலை ரூ.1.5 கோடி இருக்கும் என தெரிகிறது.
    அமெரிக்காவில் மிசிகன் மாகாணத்தில் பூட்டிய வீட்டுக்குள் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிகாகோ:

    அமெரிக்காவில் மிசிகன் மாகாணத்தில் சோலன் டவுன்ஷிப் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அவர்களது உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டு காயங்கள் இருந்தன. எனவே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

    ஆனால் அவர்களை சுட்டது யார்? எதற்காக இக்கொலை நடந்தது? என தெரியவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பா.ஜனதாவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 4½ ஆண்டுகால ஆட்சியில் தங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என பெருமிதத்துடன் கூறினார். #BJP #Modi
    புதுடெல்லி:

    மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தனது அரசின் செயல் பாடுகளை அவர் பெருமிதத்துடன் எடுத்துரைத்ததுடன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    கட்சியை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-

    சர்தார் வல்லபாய் படேல் பிரதமராகி இருந்தால் நாட்டின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதைப்போலவே 2004-ம் ஆண்டில் வாஜ்பாய் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்தியா பல மைல்கற்களை எட்டியிருக்கும். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 10 ஆண்டுகளை வீணாக்கி விட்டது.

    அந்த ஆட்சியில் இழந்த தன்னம்பிக்கை மீண்டும் ஏற்பட்டு இருப்பதை தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 4½ ஆண்டுகால ஆட்சி உறுதி செய்திருக்கிறது. தற்போது ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தேசிய கட்டமைப்பில் பங்காற்ற விரும்புகிறார்கள். தங்கள் வரிப்பணம் உண்மையாகவும், வீரியமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.

    எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் பாதிக்காத வகையில் ஒரு அரசால் இயங்க முடியும் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்திருக்கிறது. எங்கள் மீது தற்போது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

    அதேநேரம் ஊழல் விவ காரத்தில் தவறிழைத்தவர் களை நாங்கள் விடப்போவதில்லை. ஊழலுக்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட நட வடிக்கைகள் அனைத்தும், பெரிய பனிப்பாறையின் ஒரு முனை போன்றதுதான். இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஊழல் தொடர்பாக தவறிழைத்த ஒருவரையும் இந்த காவலாளி விடமாட்டேன்.

    ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், ரபேல் போர் விமான பேரத்திலும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும்.

    விவசாயிகளின் நிலைமை மேம்படுவதற்காக மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. பொது பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு, இளைய சமூகத்துக்கு மத்திய அரசு வழங்கிய பரிசாகும். இதன் மூலம் அனைவருக்குமான நீதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, காங்கிரசின் கைப்பாவையாக செயல்பட்டு வந்த சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை நிறுவனங்கள் பலமுறை எனக்கு தொல்லை கொடுக்க முயன்றன. எனினும் அந்த அமைப்புகளை குஜராத்தில் செயல்படுவதற்கு நான் தடை விதிக்கவில்லை.

    ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் ஆளும் ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கார் மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் சி.பி.ஐ. நுழைய தடை விதித்து இருக்கின்றன. அவர்களுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை. அந்த தலைவர்கள் என்ன தவறு செய்திருக்கிறார்கள்? இந்த மாநிலங்கள் ஏன் சி.பி.ஐ. அமைப்பை எதிர்க்கின்றன?

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotoZ4Play #Smartphones



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ்: மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 பிளே உள்ளிட்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், மோட்டோரோலாவின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மோட்டோ இசட் 4 பிளே என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் லீக் ஆகியுள்ளது.

    அதன்படி மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதன் வால்யூம் ராக்கர் பட்டன்கள் போனின் வலதுபுறம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பின்புறம் ஒற்றை கேமரா யூனிட் மற்றும் மோட்டோ மாட் வசதிக்கான கனெக்டர்கள் காணப்படுகிறது.



    3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படும் மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும், உயர் ரக பிரிவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போனில் ஃபிளாக்‌ஷிப் பிராசஸர் வழங்கப்படலாம்.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி மோட்டோரோலா தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. முதற்கட்டமாக மோட்டோ ஜி7 சீரிஸ் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
    டுகாடி இந்தியா சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிளில் அதிரடி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. #ducati #bike



    டுகாடி இந்தியா நிறுவனம் தனது புதிய ரக மோட்டார்சைக்கிள் பேனிகேல் வி-4 ஆர் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புது டுகாடி பேனிகேல் வி-4 ஆர் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடலாகும். இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வெறும் ஐந்து யூனிட்களே வழங்கப்படுகின்றன.

    ரேசிங் பைக் மாடலான டுகாடி பேனிகேல் வி-4 ஆர் 998 சி.சி. திறன் கொண்டது. இதில் வி-4 மோட்டார் பம்ப் உள்ளது. இது 221 ஹெச்.பி. மற்றும் 15,250 ஆர்.பி.எம். மற்றும் 112 என்.எம். (நியூட்டன் மீட்டர்) 11,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.

    இந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக மோட்டோ ஜி.பி. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரேடியல் மவுன்ட் செய்யப்பட்ட நான்கு பிஸ்டன் பிரெம்போ கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மோட்டார்சைக்கிளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.



    இதில் ஏ.பி.எஸ்., மல்டி லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவிலான மின்னணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பந்தய மைதானத்துக்கான இந்த மோட்டார் சைக்கிளை சாதாரண சாலையில் ஓட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்தய களத்தில் மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் டுகாடி பேனிகேல் வி-4 ஆர் சீறிப் பாயலாம்.

    இந்தியாவில் டுகாடி பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.51.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட விற்பனை மையங்களில் பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு செய்யப்படுகிறது.

    டுகாட்டி பேனிகேல் வி-4 ஆர் விநியோகம் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என டுகாடி இந்தியா தெரிவித்துள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வலைதளங்களில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Samsung #androidgoedition



    சாம்சஹ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஜெ2 கோர் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சாம்சங் மற்றொரு ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    மற்ற ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களை போன்று இல்லாமல், கேலக்ஸி ஜெ4 கோர் பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்திருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 6.0 இன்ச், 720x1440 பிக்சல் TFT டிஸ்ப்ளே இருக்கிறது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ4 கோர் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 720x1440 பிக்சல் TFT டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
    - 1 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புளு, பெய்க் மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி ஜெ4 கோர் விலை மற்றும் விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Micromax #smartphone



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்கள் - பாரத் 4 தீபாவளி எடிஷன் மற்றும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களில் ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷனில் 18:9 ரக டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இதை கொண்டு மற்ற சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் சிப்செட் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்படவில்லை.



    மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1 ஜி.பி. ரேம் 
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    மைக்ரோமேக்ஸ் பாரத் 4 தீபாவளி எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1 ஜி.பி. ரேம் 
    - 8 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விலை ரூ.5,899 என்றும், பாரத் 4 தீபாவளி எடிஷன் விலை ரூ.4,249 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விற்பனை துவங்கிவிட்ட நிலையில், பாரத் 4 தீபாவளி எடிஷன் விற்Hனை நவம்பர் 3ம் தேதி துவங்குகிறது.

    புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையனஅஸ் ஜியோ பயனர்களுக்கு 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.198/ரூ.299 ரீசார்ஜ்களை செய்யும் போது 5 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 
    ×